பொரளை துப்பாக்கிச் சூடு : காயமடைந்த மூன்று பேர் கவலைக்கிடம்

Published By: Digital Desk 3

08 Aug, 2025 | 02:12 PM
image

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷன் பெல்லன, 

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இளைஞன் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மேலும் மூவர் தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபரின் நிலை கவலைக்கிடமாக இல்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூவருக்கும் எதிர்காலத்தில் மேலதிகமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் எனவும், அவர்களின் உடல்நிலை குறித்து தற்போது திட்டவட்டமாக எதுவம் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொரளை, சஹஸ்புர சிறிசர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம்  இரவு 8:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இளைஞர்கள் குழுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தாக்குதலில் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பின்னர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பு 09 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20