மூதூரில் விபத்து ; ஒருவர் பலி ; மற்றுமொருவர் படுகாயம்!

08 Aug, 2025 | 10:07 AM
image

(எஸ்.கீதபொன்கலன்)

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர்  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

டிப்பர் வாகனத்தின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21
news-image

'டிட்வா' சூறாவளிக்கு பின் முதன்முறையாக பேராதனையிலிருந்து...

2026-07-11 18:21:58
news-image

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

2026-07-11 17:55:03