ஆழ்கடல் மீன்வளத்தில் உயிரிழக்கும் மீனவர்களுக்கு நட்ட ஈடு ரூ.10 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர்

Published By: Vishnu

07 Aug, 2025 | 10:37 PM
image

இலங்கையிலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்று மரணமடையும் அல்லது பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும்.  அவ்வாறு மரணிக்கும் மீனவர்களுக்கு இதுவரை காலம் வழங்கப்பட்டு வந்த இரண்டு இலட்சம் ரூபா நட்ட ஈட்டை பத்து இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கடற்றொழில் நீதியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் எம்.எஸ்.உதுமாலெப்பை எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

உதுமாலெப்பை எம்பி  தமது கேள்வியின் போது;

அட்டாளைச்சேனை பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற இரண்டு பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் 130 நாட்களுக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஒருவர் மரணம டைந்ததாகவும் குறிப்பிட்டு அவர்களுக்கான நட்ட ஈடு தொடர்பில் கேள்வி எழுப்பினார். அவ்வாறு வழங்கப்படும் நட்ட ஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும் அவர் வினவினார்.

அத்துடன் இவ்வாறு வடக்கிலிருந்து மீன்பிடிக்க சென்றவர்கள் தொடர்பிலும் குறிப்பிட்ட அவர், அவர்களது படகுகளும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் அமைச்சர்   மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இவ்வாறு அந்தந்த நாடுகளின் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் குறித்த படகுகள் அந்த நாட்டின் வழக்குப் பொருளாக பயன்படுத்தப்படுவதால் உடனடியாக அந்த படகுகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது. 

வழக்கு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அந்த படகுகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அப்போது அந்தப் படகுகள் சேதமடைந்திருந்தால் அதற்கு ஏற்ப அதற்கான நட்ட ஈடு அல்லது உதவித் தொகையை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்பவர்கள் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படுவது உண்டு. அவர்களில் சிலர் தெரிந்தே கடல் எல்லைகளைத் தாண்டி பின்பற்ற வேண்டிய சட்டங்களை மீறி செயற்படும் போதும் இவ்வாறான காணாமல் போதல் அல்லது பாதிப்புகள் இடம் பெறுகின்றன.

மீனவர்கள் பலர் மாலைதீவு, இந்தியா மொரீசியஸ் உட்பட பல்வேறு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நடைமுறையிலுள்ள சட்டங்களை முறையாக பின்பற்றி செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கும் அவர்களது படகுகளுக்கும் நட்ட ஈடு அல்லது இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது கடற்றொழில் மத்திய நிலையத்தில் அவர்களை கண்காணிக்கும் உரிய உபகரணங்கள் உள்ளதால் எவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது தொடர்பான விபரங்களை அதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அதன் உதவியுடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும்  குறிப்பிட வேண்டும். 

எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, அவர்களின் படகுகள் சேதமடைந்திருந்தால் அதற்கு நட்ட ஈடு அல்லது உதவித்தொகை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45