தனது இரு தங்கைகளைக் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நபர் தப்பி சென்று தனது மூன்றாவது தங்கையும் பாலியல் துஷ்பிரயோகம் உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மலேசியாவின் சுங்கை பட்டாணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை சுங்கை லாயாரிலுள்ள தனது வீட்டிலிருந்து யாருமில்லாத பக்கத்து வீட்டிற்கு தனது 8 வயது தங்கையை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குறித்த சிறுமி நடந்தவற்றை தாயிடம் தெரிவித்ததோடு, அண்ணன் நடந்தவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள பொலிஸார், ஏற்கனவே 14 மற்றும் 9 வயதுடைய தனது இரு தங்கைகளையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞனிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோல மூடா மாவட்ட துணை தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த இளைஞனுக்கு 10  வருடங்கள் முதல் 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.