பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானம்

07 Aug, 2025 | 06:58 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்  சம்பவத்தின் சாட்சியாளராக  பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்  விசாரணைகள்   எவ்வாறு சிறந்த முறையில் இடம்பெறும். அரசாங்கத்தின் விசாரணைகளை அரசாங்கம் மீள்பரீசீலனை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி  குறிப்பிடுகின்ற  நிலையில்,அருண ஜயசேகரவை பதவி நீக்குவது பொறுத்தமானதாக அமையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்க எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை  கொண்டுவர தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குற்றங்கள் தொடர்பில் பாரபட்சமின்றிய  வகையில் விசாரணைகள் எடுக்கப்படும் என்று  ஜனாதிபதி குறிப்பிடுவது உண்மையாயின் அருண ஜயசேகரவை பதவி நீக்க வேண்டும்  என்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

இந்த ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில்  முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது,முறையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும், ஏப்ரல் 21 ஆம் திகதியன்று பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக பதவி வகித்த அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை பதவி வைத்துக் கொண்டு எவ்வாறு முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் விசாரணையை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று  ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவி நீக்கி விட்டு   முறையான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கமைவாகவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும்  போலியாகியுள்ளன

தேசிய பாதுகாப்பு தொடர்பில்  கற்பிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பை மலினப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக  நல்ல நோக்கத்துக்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது  என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி  நிசாம் காரியப்பர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குற்றவாளி என்று எவரும் குறிப்பிடவில்லை.இருப்பினும் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவத்தில் அவர் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவரை பதவியில் வைத்துக் கொண்டு முறையான விசாரணைகள் சுயாதீனமான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதை எவ்வாறு நம்ப முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:02:32
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00