மொனராகலை அலியாவத்தை வனப்பிரதேசத்தில் நேற்று திடீரென தீ பரவியுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

தீ அணைப்பு பிரிவனர் இராணுவ அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், மற்றும் வன பாதுகாப்பு துறையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும் வனப்பகுதி பாரியளவு தீக்கிறையாகி உள்ளது என்றும் ரத்தொடை, உதலியாவ வனப்பகுதியில் தற்போது தீ பரவியுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.