ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வலையமைப்பின் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் திலின சம்பத் எனப்படும் “வலஸ் கட்டா” என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் திசாநாயக்கவின் தேவன்மினி திசாநாயக்க எனப்படும் கம்பஹா பஸ் தேவா, கடந்த 3 ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு மாகாண வடக்கு குற்றப்புலனாய்வுபிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது காவல்துறையினரால் மேலும் பல தகவல்களை கண்டறிய முடிந்தது.
இதன்போது, சீதுவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 'வலஸ் கட்டா' கைது செய்யப்பட்டார்.
மேலும் இதன்போது நடத்தப்பட்ட சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 550 கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய திலின சம்பத் எனப்படும் வலஸ் கட்டா' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றவியல் வலையமைப்பின் முக்கிய சந்தேக நபராக அவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கெஹல்பத்தர பத்மேவுடன் அவர் பரிமாறிக்கொண்ட வாட்ஸ்அப் செய்திகளையும் பொலிஸாரினால் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த பொசன் பௌர்ணமி தினத்தன்று தானசாலை நடைபெறும் பகுதியில் கம்பஹா "ஒஸ்மன்" என்பவரை கொலைச் செய்ய கெஹல்பத்தர பத்மேவுடன் இணைந்து அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கெஹல்பத்தர பத்மே தானசாலை நடைபெறும் இடத்தை அவதானித்து அறிவிக்குமாறு திலின சம்பத்துக்கு தெரிவித்துள்ளார்.
திலின சம்பத் அந்த இடத்தில் குற்றச் செயலை செய்யமுடியாது என கெஹல்பத்தர பத்மேவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தாய்லாந்துக்குச் செல்லத் தயாராகும் போது கைது செய்யப்பட்ட கம்பஹா பஸ் தேவாவின் பயணப்பையிலிருந்து ஒரு பயிற்சி புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதன் கடைசி பக்கத்தில் மூன்று வீடுகளுக்கான வீதி வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், கேள்விக்குரிய மூன்று வீடுகளும் மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஹீனடியன சங்காவின் மூன்று நண்பர்களின் வீடுகள் என்பது தெரியவந்தது.
இதன்போது, அந்த வீடுகளின் வரைபடத்தை கொண்டுச் சென்று கெஹல்பத்தர பத்மேவிடம் கொடுக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கம்பஹாவின் பத்தடுவன பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள், தொடர்புடைய வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுடையது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் மேற்பார்வையின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வா மேற்கொண்டு வருகிறார்.
பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வாவுக்கு சமீபத்தில் கெஹல்பத்தர பத்மே என கூறி தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
இதனை தொடர்ந்து, பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
இதன்போது,பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கெஹல்பத்தர பத்மே உட்பட மூன்று நபர்களின் தொலைபேசி பதிவுகள் தொடர்பிலான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM