இலங்கை ரி20 அணிக்கு அதிசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மும்முனை ரி20 தொடர் நாளை ஆரம்பம்

Published By: Vishnu

06 Aug, 2025 | 06:37 PM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிராக இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் (ரி20)  தொடர் ஆகியவற்றுக்கு  சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்பாடு செய்துள்ள உள்ளூர் ரி20 மும்முனை கிரிக்கெட் தொடர் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 07ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாதம் நடைபெறவிருந்த லங்கா பிறீமியர் லீக் டிசம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டதால் இலங்கையின் பிரதான கிரிக்கெட் அட்டவணையில் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி ரி20 உள்ளூர் மும்முனைப் போட்டியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடத்த தீர்மானித்தது.

இதற்கு அமைய நிறங்களின் பெயர்களில் 3 வீரர்களின் தலைமையில் 3 அணிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுசெய்துள்ளது.

சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட இந்த மூன்று அணிகளில் இடம்பெறும் தேசிய வீரர்கள், வளர்ந்துவரும் இலங்கை ஏ அணி வீரர்கள் ஆகியோரின் திறமைகள் உள்ளூர் ரி20 மும்முனை தொடரில் பரீட்சிக்கப்படவுள்ளது.

நீலம், பச்சை, சாம்பல் ஆகிய 3 நிறங்களின் பெயர்களைக் கொண்ட இந்த அணிகள் ஒன்றையொன்று 4 தடவைகள் லீக் சுற்றில் எதிர்த்தாடும். 

லீக் சுற்று ஆகஸ்ட் 7, 8, 9, 10, 11, 12ஆம் திகதிகளில் நடைபெறும்.

லீக் சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அக்டோபர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

போட்டிகள் யாவும் எஸ். எஸ். சி. மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும்.

குழாம்கள் விபரம்

டீம் புளூஸ் (Team Blues): பெத்தும் நிஸ்ஸங்க, விஷேன் ஹலம்பகே, தனஞ்ஜய டி சில்வா, அஹான் விக்ரமசிங்க, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே (தலைவர்), ஜெவ்ரி வெண்டசே, அக்கில தனன்ஜய, மதீஷ பத்திரண, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான்ன் மதுஷன்க, லிலன் ரங்கன, மொஹமத் ஷிராஸ், ரவிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, நிஷான் மதுஷ்க, செனித்த ஹலம்பகே.

டீம் க்றீன்ஸ்; (Team Greens): குசல் மெண்டிஸ், லசித் குரூஸ்புள்ளே, சல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ் (தலைவர்), சாமிக்க கருணாரத்ன. துஷான் ஹேமன்த, ட்ரவீன் மெத்யூஸ், நுவான் துஷார, துஷ்மன்த சமீர, பிரமோத் மதுஷான், ஜனித் லியனகே, துலாஜ் சமுதித்த, தரிந்து ரத்நாயக்க, நிமேஷ் விமுக்தி, காமில் மிஷார, லஹிரு மஷன்க, சொனால் தினூஷ.

டீம் க்றேஸ் (Team Greys): தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு உதார, நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), ரமேஷ் மெண்டிஸ், சமிந்து விக்ரமசிங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்ஷன, ஏஷான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ, கருக்க சன்கேத், மோவின் சுபசிங்க, மிலான் ரத்நாயக்க, மெலன் ஹன்சக, சஹான் ஆராச்சிகே, ஷெவோன் டேனியல், ஸ்நேத் ஜயவர்தன.

போட்டி அட்டவணை (Schedule)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12