எம்மில் பலரும் பல காரணங்களால் அல்லது விவரிக்க இயலாத காரணங்களால்.. செய்த தொழிலில் நஷ்டம் என்றும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும், தொழிலில் போட்டி அதிகமாகிவிட்டது என்றும் பல காரணங்களால் செய்த தொழிலை நஷ்டத்துடன் முடக்கி வைத்திருப்பர்.
இவர்களுக்கு தொழில் அனுபவம் இருந்தாலும்... முதலீட்டை மீண்டும் திரட்ட இயலும் என்றாலும்... லாபம் வராது என கணக்கிட்டு, மனதளவில் சோர்வடைந்து முடங்கி கிடப்பர்.
இவர்கள் தங்கள் பணிக்கான அலுவலகத்தையோ, விற்பனை நிலையத்தையோ நாட்கணக்கில் திறக்காமல் பூட்டி வைத்திருப்பர்.
இந்நிலையில் இதுபோன்ற தொழில் முடக்கம் ஏற்பட்டவர்களுக்காக எம்முடைய முன்னோர்கள் சூட்சமமான தாந்திரீக பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்குச் சென்று உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் பித்தளை எனும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட சிங்கத்தின் முழு உருவ சிலையை வாங்கிட வேண்டும். இந்த சிலையை உங்களுடைய அலுவலகத்திலோ அல்லது தொழில் செய்யும் நிலையத்திலோ வைத்திட வேண்டும் .
இந்த சிங்க முக சிலை நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உங்களுடைய தொழிலில் ஏற்பட்டிருந்த முடக்க நிலையை மாற்றி அமைக்கும். உடனே எம்மில் சிலர் பித்தளையிலான சிங்க முக சிலையை வாங்கும் அளவிற்கு பொருளாதார ஆற்றல் இல்லையே..! என புலம்புவர்.
இவர்கள் இத்தகைய சிங்க முக சிலையின் புகைப்படத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை உங்களுடைய தொழில் நடத்தும் இடத்தில் இடம்பெறச் செய்தாலும் அதனுடைய நேர் நிலையான ஆற்றல் பரவி உங்கள் தொழில் முடக்கத்தை நீக்கும்.
அதே தருணத்தில் நீங்கள் இத்தகைய தருணத்தில் இந்தத் தொழிலில் நான்தான் ராஜா...! இந்த தொழிலில் நான்தான் ராணி..! என்ற நேர் நிலையான மனநிலையுடன் தொழிலை தொடர்ந்து நடத்தினால், ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதத்திற்குள் தொழில் மீண்டும் பழையபடி உற்சாகமடையும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM