'பலஸ்தீன வீடுதலை' என்ற வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றிய இலங்கை வீரருக்கு பீபா அபராதம் விதிப்பு

06 Aug, 2025 | 05:53 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கால்பந்;தாட்டப் போட்டி முடிவில் வெற்றிக்களிப்பில் மிதந்த வீரர்கள் மத்தியில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அரசியல் வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றிய இலங்கை வீரர் ஒருவருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கம் (FIFA) விதித்துள்ளது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்டப் போட்டில் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது.

அதன் பின்னர் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள் குழுவாக படம் எடுத்துக்கொண்டபோது ஒரு வீரர் மாத்திரம் 'பலஸ்தீன விடுதலைக்காக பிரார்த்தியுங்கள்' என்ற வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றினார்.

இந்த வாசகம் தாங்கிய உள்ளங்கியை அணிந்திருந்த வீரர், அந்தப் போட்டியில் விளையாடாதபோதிலும் போட்டியுடன் தொடர்புடைய கொண்டாடட்டத்தின்போது ஏனைய வீரர்கள் மத்தியில் தோன்றியிருந்தார்.

இது தொடர்பாக ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்துடன் இணைந்து செயற்பட்ட பீபா, தனது ஒழுக்காற்றுக் கோவை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

ஒழுக்காற்றுக் கோவையின் பிரகாரம், போட்டியின்போது அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின்போது அரசியல், சமயம் அல்லது தனிப்பட்ட ரீதியான சுலோகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் போட்டியின் கடைசி விசிலுக்குப் (final whistle) பின்னர் இடம்பெற்றபோதிலும், அது உத்தியோகபூர்வ போட்டி சூழலின் ஒரு பகுதியாக இருந்துள்ளதென பீபா கருதுகின்றது.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட வீரருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக பீபா விதித்துள்ளது. கால்பந்தாட்டத்தில் அரசியல் சமத்துவம் பேணப்படவேண்டும் என்ற பீபாவின் கடுமையான நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02
news-image

'இறுதிப் போட்டியில் பங்களாதேஷும் இந்தியாவும் விளையாடட்டும்'...

2026-11-10 00:18:22
news-image

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

2026-11-09 19:17:14
news-image

சாவ் சம்பின்ஷிப்பில் பூட்டானுக்கு எதிரான போட்டியில்...

2026-11-08 22:18:41
news-image

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண...

2026-11-06 20:56:55
news-image

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட 3 நாள்...

2026-11-06 19:27:40
news-image

இளையோர் ஒலிம்பிக் ஆண்களுக்கான 200 மீற்றர்...

2026-11-06 18:12:26
news-image

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட்...

2026-11-06 09:30:30