ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்டால் ஆளும் தரப்புக்கு எதிராகவும் நடவடிக்கை - பிரதமர் ஹரிணி அறிவிப்பு

06 Aug, 2025 | 05:40 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் ஊழல்  மோசடிகளை இல்லாமல் செய்ய அரசாங்கம் உண்மையாகவே முயற்சிக்கின்றதே  தவிர இந்த நடவடிக்கைகளின் மூலம் ஆளுமையை உயர்த்திக்கொள்வதற்காக அல்ல. எமது அரசாங்கத்தில் யாராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) பிரதமரிடமான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்  சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சமிந்த  விஜேசிறி தனது கேள்வியின்போது, 

கடந்த காலத்தில் இடம்பெற்ற  வெள்ளைப்பூண்டு மோசடி, சீனி மோசடி மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தபோதும் இதுவரை அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. அதேநேரம், அரசாங்ககம் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில்  விசாரணை மேற்கொள்வதுபோன்று, இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் உண்மையாக விிசாரணை மேற்கொள்ளுமா?

குறிப்பாக  கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடிக்கு சமமாக இந்த அரசாங்கத்தில் உப்பு மோசடி இடம்பெற்றுள்ளது.  அதேபோன்று சீனி மோசடிக்கு சமமாக  கொள்கலன் விடுவித்த  மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த மோசடிகள் தொடர்பிலும் அரசாங்கம் முறையான விசாரணை மேற்கொள்ளுமா  என கேட்கிறேன் என்றார்.

அதற்கு பிரதமர் தொடர்ந்து  பதிலளிக்கையில்,

எமது அரசாங்கம் ஊழல் மோசடிகள் தொடர்பில் உண்மையாகவே விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை  எடுத்துவருகிறது. அவ்வாறு இல்லாமல் இதன்மூலம் அரசாங்கத்துக்கு  கெளரவத்தை அதிகரித்துக்கொள்வதற்காக மேற்கொள்வதில்லை. அவ்வாறு நாங்கள் செயற்படுவதாக தெரிவிப்பதை முற்றாக நிராகரிக்கிறோம்.

அதேநேரம் கடந்த  காலங்களில் இடம்பெற்ற  ஊழல் மோசடிகள் தொடர்பில்  விசாரணை மேற்கொள்வதுடன் எமது அரசாங்க காலத்தில் அவ்வாறு  மாேசடிகள் இடம்பெற்றால், அவை தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்வோம். அதில்  எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நாட்டுக்குள் ஊழல் எதிர்ப்பு கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தும் உண்மையான முயற்சியே தற்போது மேற்கொள்கிறோம். இந்த  முமுயற்சியிலும் பிழையான நடவடிக்கைகள் இடம்பெறுமாக இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு, அந்த  திருடர்களையும்  கண்டுபிடிப்போம். அதில் எந்த சந்தேகமும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-14 12:50:54
news-image

பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறது இலங்கை...

2026-07-14 12:49:42
news-image

வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

2026-07-14 12:51:36
news-image

சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம்...

2026-07-14 12:49:59
news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47