மேஷம்
விடாமுயற்சியும் மனவலிமையும் கொண்ட மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்வையிடுவது துணிச்சலான எந்த முடிவையும் எடுக்கும் வலிமை உண்டாகும். தனாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது சிலருக்கு நல்ல வரன் அமைவதும், சிலருக்கு நீண்ட நாள் நிறைவேறாத சில கோரிக்கைகளும் நிறைவேறும்.
பாக்கியாதிபதி குரு மூன்றாமிடத்தில் அமர்ந்து மன வலிமையும் சமயோசிதமான அறிவாற்றலையையும் தருவார். தனாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவது. உங்களின் விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது அரசு துறையில் பணிபுரிபவருக்கு பதவி உயர்வு, துறை சார்ந்த அந்தஸ்து மதிப்பு மரியாதைகள் உண்டாகும். கவலையை மறந்து தொடர்ந்து உங்கள் பணியை செய்து வருவீர்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து சில தடைகளை கொடுத்தாலும் உங்களின் மன வலிமையால் சகல காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பெறுவீர்கள். சுகஸ்தானாதிபதி சந்திரன் ராசியை பார்ப்பதால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. எதிலும் துணிச்சலான முடிவுகளை எடுத்து நல்லபலன்களை அடைவீர்கள். கலைதுறையினர் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். அரசியலில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உடல் நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், சிவப்பு, வெள்ளை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
02-.08.-2025 சனி இரவு 12.47 முதல் 05-.08-.2025 செவ்வாய் பகல் 11.58 மணி வரையும்.
30.-08-.2025 சனி காலை 07.56 முதல் 01-.09-.2025 திங்கள் இரவு 07.12 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 -- 07.00 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு எருக்கம் பூ மாலை போட்டு மோதகம் வைத்து வேண்டிக் கொள்ள சகல தடைகளும் நீங்கும்.
ரிஷபம்
எது நன்மையோ, அதைத் தேடிச் சென்று செயல்படுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் தனாதிபதி புதனுடனும், லாபாதிபதி குருவுடனும் இணைவு பெறுவது பொருளாதார வளம் பெறும் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். முன்யோசனைகளை செயல்படுத்தி மன வலிமையுடன் தெளிவான முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள்.
உங்களின் சுகஸ்தானாதிபதி சூரியனும் யோகாதிபதி சனியின் வீட்டை பார்வை இடுவது தொலைதூர பயணம் சென்று வருதல். தீர்த்த யாத்திரை சென்று வருதல் மருத்துவ ஆலோசனை பெற்று உடலை பராமரித்து கொள்தல் போன்ற வழிகளில் உங்களை சரி செய்துகொள்வீர்கள். சூரியனின் வீட்டில் கேது அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் வெளிநாட்டு தொடர்புகளும், தொழிலிலும் விருத்தியை தரும். காரண காரியம் இல்லாமல் எதையும் செய்யமாட்டீர்கள் தனித்துவமான செயல்களால் உங்களை மேன்மைபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு விமான பயணம் சென்று வரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப பராமரிப்புக்காகவும், எதிர்பாராத செலவுகளுக்காகவும் சிறு கடன்படும் நிலை உண்டாகும். உறுதி தன்மையை கடைசி வரை கைவிட மாட்டீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகளும், பழைய ஆவணங்களை தேடி கண்டுபிடித்து அதன்மீது மேல் நடவடிக்கையும் செய்வீர்கள். உங்களுடன் கூட்டு தொழில் செய்தவர் அவரே முன் வந்து அதனை உங்களின் ஒப்படைத்து விட்டு பங்கு தொகையை பெற்று சென்று விடுவார். மாணவர்களின் கல்வியில் சிறப்பான வளர்ச்சியை எட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
05.-08.-2025 செவ்வாய் பகல் 11.57 முதல் 07-.08.-2025 வியாழன் இரவு 09.12 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
பிரதோச காலத்தில் சிவ ஆலயம் சென்று நந்திக்கு நெய் தீபமிட்டு அருகம்புல் மாலை சாத்தி வேண்டிக் கொண்டு, மூன்று முறை சுற்றி வர மிக சிறப்பான நற்பலன்கள் கைகூடும்.
மிதுனம்
வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுத்திக்கொள்ளும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பார்க்குமிடம் சிறப்பு. ராசிநாதன் ராசியில் அமர்வதும் உங்களின் ஆற்றலுடனான செயல்பாடுகள் சிறப்பாக அமையும். தன ஸ்தானாதிபதி சந்திரன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவது தேவைக்கு பொருளாதார மேன்மை அடைய பெறுவீர்கள். உங்களின் அரசியல் செல்வாக்கு உயரும்.
எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் தேவைகளுக்கு ஏற்ப எதையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் குறிப்பிட்ட நேரத்தில் காரியத்தை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். யாரையும் எதிலும் முக்கியத்துவம் தராமல், அவரவர்களின் தகுதியை அறிந்தும், அனுசரித்தும் உங்களின் செல்வாக்கினை பெருக்கும் வகையில் செயல்களை ஒப்படைத்து விடுவீர்கள். சாதனையாளர்கள் வரிசையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தனிப்பட்ட செல்வாக்கை விரும்பவில்லை என்றாலும் அதுவாகவே தேடி வரும். காலத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்திருப்பதால் அடுத்த அடுத்த காரியங்களை திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்ந்து உங்களின் சுயமுயற்சிக்கு பக்கபலமாக அனைத்து காரியத்தையும் செயல்படுத்துவார். சந்திரனின் பார்வை சாதகமான சூழ்நிலை உருவாக்கும்படி எல்லாம் நல்ல படியாக அமையும். கலைத்துறையினருக்கு தகுந்தபடி அறிவு திறனும் சலிக்காத செயலும் உங்களை ஊக்கபடுத்தும். சுகஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலிலும், உத்தியோகத்திலும் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பல நாட்கள் கொடுத்த இடத்தில் வராமல் இருந்த கடன் வசூலாகும். பொருளாதாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, ஒரெஞ்ச், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
07.-08.-2025 வியாழன் இரவு 09.13 மணி முதல் 10.-08.-2025 ஞாயிறு அதிகாலை 04.02 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து நெய் தீபம் மூன்று ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும்.
கடகம்
பகுத்தறிவுப் பாதையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சூரியன் ராசியில் அமர்ந்து தைரியத்தையும், கூட்டு தொழிலில் மேன்மையும் அடைய பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலில் வளர்ச்சியையும். பொருளாதார நற்பலன்களையும் பெறுவீர்கள். தாயாரின் அன்பை பெறுவீர்கள்.
உங்களின் ராசிநாதன் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் தாயார் உடல் நலன் சிறப்பாக அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். எதிர்ப்புகள் குறைந்து நலம் பெறுவீர்கள். யோகாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதால் கிடைத்ததற்கு அரிய பலவித நன்மைகளை அடைவீர்கள். போதும் என்ற அளவு கடந்த காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அடைந்து விட்டீர்கள். இனி அத்தகைய துன்பங்களிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.
அட்டம சனியாக இருந்தாலும் குரு பார்வை பெறுவதால் அதன் தாக்கம் குறைய பெறுவீர்கள். குலம் கோத்திரம் அறிந்து திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி விரும்பும் ஆண்கள் பெண்களின் திருமணத்தை ஆதரித்து வரவேற்பீர்கள். சொல்லிலும், செயலிலும் வல்லமை பெற்று விளங்கி செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படும் பல காரியங்களை எளிமையாக செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு வெளியூர் சென்று கலை உணர்வுகளை உணர்த்தும் வகையில் செயல்படுவீர்கள். உண்மையும் உறுதியும் கொண்டு செயல்படுவீர்கள். தொழிலில் உங்களின் தேவைகள் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, ஒரெஞ்ச், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
10-.08.-2025 ஞாயிறு அதிகாலை 04.03 முதல் 12-.08.-2025 செவ்வாய் காலை 08.35 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மஞ்சள் பட்டு சாற்றி மூன்று நெய் தீப ஏற்றி மனமுவந்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
சிம்மம்
தன்னம்பிக்கையும் மனவலிமையும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் லாபாதிபதியுடன் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரனும் குருவும் அமர்ந்து பஞ்சம ஸ்தானத்தை பார்வை இடுவதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவீர்கள். முதலீடு இல்லாத சில தொழில் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். ராசியில் கேது அமர்வது உடலில் உஷ்ணம் சார்ந்த உபாதைகள் உண்டாகும்.
உங்களின் ராசிக்கு சிறப்பான எதிர்கால வளர்ச்சியை உருவாக்கி கொண்டு விளங்குவீர்கள். எந்த தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாடுகள் கொண்டு இயங்குவீர்கள். சொன்ன சொல்லையும் எடுத்த செயலையும் எப்பொழுதும் பின் வாங்கும் சூழ்நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். எதற்கும் உங்களை சமாதானம் செ்யது கொள்ளமாட்டீர்கள். பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். உரிமையான விடயங்களை எதிர்கொண்டு செயல்படுத்தி உரிமையை நிலைநாட்டுவீர்கள். ஏழாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெற்றாலும் குரு பார்வையை பெறுவதால் கெடு பலன்கள் வராது.
கலைத்துறையினருக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருதல் கலை ஆர்வமுள்ளவர்களை உங்களுடன் இணைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். புதிய தொழில் துவங்குதல், தொழில் துவங்க முயற்சிகளை செய்து நன்மை பெறுவீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சமஸ்தானத்தை பார்ப்பதால் குரு மங்கள யோக பலன்களை பெறுவீர்கள். திருமண வாய்ப்பை பெறுவீர்கள். காலத்தை அறிந்து நீங்கள் செயல்படும் விதம் உண்டாகும். குலதெய்வ வழிபாடுகள் உங்களை மேன்மை அடைய செய்யும். எதையும் ஆராய்ந்து செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
12-.08.-2025 செவ்வாய் காலை 08.36 முதல் 14.-08-.2025 வியாழன் பகல் 11.57 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
திங்கட்கிழமைகளில் ராகு காலத்தில் சிவ வழிபாடும், விநாயகருக்கு ஏழு தேங்காய் எண்ணெய் தீபமேற்றி அவில் சக்கரை வைத்து மனமுருக வேண்டிக் கொள்ள சகல காரியமும் வளம் பெறுவீர்கள்.
கன்னி
அறிவாற்றலையும் செயல்திறனும் கொண்ட கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமர்ந்தும் தொழில் ஸ்தானத்தில் குருவுடன் ராசிநாதன் இணைந்து சுகஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறுவீர்கள். ராசியில் அட்டமாதிபதி செவ்வாய் அமர்ந்து அட்டமஸ்தானத்தை பார்வை இடுவதால் சில காரியங்களை கையாளும் போது கவனமுடன் இருப்பது நல்லது.
உங்களின் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் செய்யும் தொழில் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். தனித்த குரு அவஸ்தை தருவார் சுக்கிரன், புதனுடன் இணைந்திருப்பது தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான பலன்களை தருவார். அரசியலில் உங்களின் செல்வாக்கு சற்று உயரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொள்வீர்கள். ராசியில் செவ்வாய் அமர்வது எவ்வளவு பணம் வந்தாலும் அதற்கு தகுந்த செலவு வந்து இருப்பை குறைக்க செய்யும். பரந்த மனதை உடைய உங்களுக்கு ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுவீர்கள். எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும்.
தனஸ்தானாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாபாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் இருக்க தொழிலில் தங்கு தடையின்றி சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பெற்ற கடனை அடைக்கவும், தேவைக்கு செலவுகளை செய்யவும் பயன்படும். ஒரு விடயம் மட்டும் நினைவில் கொள்வது நல்லது. இப்போது சரியாகி விடும் சரியாகி விடும் என்று பலன் சொல்கிறார்கள்… எதுவும் நடப்பதில்லை. இதனை கேட்டு மனவருத்தம் அடைவீர்கள். கர்ம வினைகளை தீர்க்க பல பரிகார பூஜைகள், விளக்குகள் ஏற்றி பார்த்தும் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று புலம்பும் உங்களுக்கு இதை சொல்லியாக வேண்டும். உணர்வுடனும், வழிபாடுகளில் உண்மையான நம்பிக்கையும் கொண்டு தண்ணீர் உற்றி வைத்தால் கூட ஏற்றுக்கொள்ளும் தெய்வம் கடனுக்கு செய்யாமல் நம்பிக்கையுடன் தொடர் பிரார்த்தனை செய்தால் வெற்றியைத் தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
14.-08.-2025 வியாழன் பகல் 11.38 முதல் 16.-08.-2025 சனி பகல் 02.00 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் நவகிரகங்களுக்கு ஒன்பது விளக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி மிளகு பொங்கல் நைவேத்தியம் அரளி பூ மாலை பைரவருக்கு போட்டு வேண்டிக்கொள்ள சர்வ காரியமும் தடையின்றி நடக்கும்.
துலாம்
விரும்பிய செயலை செய்து வேண்டியதை பெறும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் பாக்கியஸ்தானத்தில் அமர்வதும் சிறப்பான நற்பலன்களை பெற்று தருவார்கள். சுமையாக இருந்த பல காரியங்கள் மீண்டும் செயல்பட துவங்கும் கோவில்களில் முக்கிய பணிகளை செய்வதும். புனித யாத்திரை சென்று வருவதும் நடக்கும்.
உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் ராசியில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவது கூட்டு தொழில் சிறப்பாக அமையும். வேண்டிய நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து நன்மை பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து உங்களுக்கு நல்ல தொழில் அமைத்து தருவார். அரசியலிலும் பொது வாழ்வில் நற்பெயர் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். தனித்துவமான சில காரிங்களில் ஈடுபாடு செய்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களுக்கு ஊக்கத்தை உண்டாக்கும்.
உங்களின் யோகாதிபதி சனி பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது செய்யும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். எதையும் யோசிக்காமல் செய்து விட்டு பின்பு அதை பற்றி சிந்தித்து வருந்துவீர்கள். சில நேரம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குரு ராசியை பார்ப்பதால் சில நேரம் ஆறுதலாக சில காரியம் கைகூடும். முன் ஒரு காலத்தில் செயல்படாமல் இருந்த காரியம் மீண்டும் செயல்பட துவங்கும். பூர்வீக சொத்து சார்ந்த சில ஆலோசனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பெண்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். சிலருக்கு திருமணம் நடக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். முதலீடு இல்லாத தொழில் வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
16-.08-.2025 சனி பகல் 02.01 முதல் 18-.08.-2025 திங்கள் மாலை 04.36 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி பழங்கள் நைவேத்தியமாக வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாகும்.
விருச்சிகம்
பகுத்து ஆராய்ந்து எந்த செயலையும் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவதும் அடைக்க முடியாமல் இருந்த கடன்களை அடைக்க வழி கிடைக்க பெறுவீர்கள். விரைவில் அதிலிருந்து மீள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து வெளிநாட்டு தொடர்புகளை உருவாக்குவார். எதையும் எதிர்காலத்தில் சிந்தித்து செயல்பட உறுதுணையாக உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
அஷ்டம ஸ்தானத்தில் குருவுடன் சுக்கிரனும், புதனும் இணைந்திருப்பதும், புதன் ஆட்சி பெறுவதும் உங்களுக்கு நல்ல பலனை பெற்று தராது என்பதால் புதிய தொழில் முயற்சிகளையும். கூட்டு தொழிலையும் தவிர்ப்பது நல்லது. நமக்கு எது சரியோ அதை செயல்படுத்துவது நலம். மற்றவர் விடயத்தில் தலையீடு செய்வதை குறைத்து கொள்வது நல்லது. நேற்று ஒரு நிலை இன்று ஒரு நிலை என்று யோசிக்காமல் எதிலும் உறுதியுடன் செயல்படுவது நல்லது.
அரசியலிலும், பொது வாழ்விலும் நீங்க எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்றாலும் முன்பு உள்ள அதே பதவியை தக்க வைத்து கொள்வீர்கள். குறுகிய கால முதலீடுகளில் நல்ல பலன் கிடைக்கும். உங்களின் பேச்சில் கண்ணியமும், நேர்மையும் இருக்கும். உங்களின் தனி திறமைகளால் பலவித காரியங்களில் மேன்மை அடைவீர்கள். எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தொடர்ந்து இருக்கும். பிடிவாத குணத்தை விட்டு விட்டு அனுசரித்து செய்தல் நல்லது. கலைத்துறையினர் சிறிது காலம் பொறுமையைக் காத்து கொள்வது நல்லது. சிறிது காலம் சொந்த தொழிலை விட்டு ஏதாவது வேலைக்கு சென்று வருவது நல்லது. அவசரமான காரியம் நிறைவேறாது என்பதால் எதையும் யோசித்து முடிவு எடுப்பது மிக சிறப்பு.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரெஞ்ச், பலவர்ணம்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
18-.08.-2025 திங்கள் மாலை 04.37 முதல் 20.-08.-2025 புதன் இரவு 08.18 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00 மணி) நவகிரகங்களுக்கு நல்லெண்ணெயில் விளக்கு போட்டு நவதானியம் வைத்து கதம்ப பூ சாற்றி, மிளகு கலந்த அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள தடைப்பட்ட காரியம் நிறைவேறும்.
தனுசு
துணிச்சலும் தைரியமும் கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெறுவதும், யோகாதிபதி சூரியன் தனஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கொடுத்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நல்ல பலனை பெற்று தரும். சமூக அந்தஸ்தை பெறுவீர்கள். முறையான வளர்ச்சிக்கு உண்டான பணிகளை பற்றி யோசித்து செயல்படுவீர்கள். காரண காரியமின்றி எதையும் செய்ய துணியமாட்டீர்கள். உங்களுக்கு எது சரி எனப்படுகிறதோ அதனை உடனே செயல்படுத்துவீர்கள்.
மாத கணக்கில் இழுத்து கொண்டிருந்த காரியம் இனி கைகூடும். முக்கிய விடயங்களில் எந்த சமாதானமும் செய்து கொள்ளமாட்டீர்கள். உங்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பஞ்சமாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் சந்திரன் என இருவரும் பஞ்சமஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் அனைத்து காரியமும் நல்ல மேன்மையை பெற்று தரும். சரியான வழியை தேர்வு செய்து அதில் பயணம் செய்வீர்கள். விளையாட்டு மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வீர்கள்.
செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி நல்ல பெயரை அடைவீர்கள். உங்களை நம்பி இருப்பவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்வீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் எதையும் யோசித்து செய்வீர்கள். தந்தை வழியில் சில உதவிகளை பெறுவீர்கள். பொது வாழ்விலும், அரசியலிலும் புதிய மாற்றங்கள் உண்டாகும். பதவிகளை தக்க வைத்து கொண்டு அதற்கான ஆதரவாளர்களை திரட்டுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படும் உங்களுக்கு உடல் நலனை கவனிக்க வேண்டி வரும் எதை செய்தாலும் நிதானமான போக்கை கடைபிடிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிவரும். சுற்றங்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வாரிசுகள் உங்களின் பேச்சை கேட்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், செவ்வாய், புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
20-.08-.2025 புதன் இரவு 08.19 முதல் 22.-08.-2025 வெள்ளி இரவு 01.53 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியர் வழிபாடும் செய்து வர உங்களின் வேண்டுதல் உடனே நடக்கும். பொருளாதார நிலை மேன்மை அடையும்.
மகரம்
வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை தேடிக் கொள்ளும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிககு ராசிநாதன் தனஸ்தானத்தில் ராகுவோடு சேர்ந்திருப்பதும் குரு பார்வை பெறுவதும். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதும் கூட்டுத் தொழிலில் நன்மை உண்டாகும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு உயரும். தனி மனித வளத்தை பெற்று விளங்குவீர்கள்.
ராசிநாதன் சனி பலம் பெற்று இருப்பதால் செய்யும் தொழிலில் வளம் பெறுவீர்கள். பல தொழில் செய்து எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இனி வேறு தொழிலுக்கு சென்றால் நல்லது என்று யோசித்து செயல்படுவது பொருத்தமாக இருக்காது. கடந்த கால தொழிலை விருத்தி செய்வது பற்றி ஆலோசனை செய்து அதனை அமுல்படுத்தி கவனம் செலுத்தி வந்தால் நிச்சயம் முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு சிலருக்கு வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி வரும். பணியாளர்களுக்கு ஒற்றுமையின்மையால் பல பிரச்சனை சந்திக்க வேண்டி வரும். ஒற்றுமைக்கு உங்களின் பங்கு சிறப்பாக அமையும். எல்லோரையும் அரவணைத்தும் செல்வீர்கள்.
ஆறாமிடத்து அதிபதி ஆட்சி பெற்றிருப்பதால் புதிய கடன் பெற்று தொழிலை மேன்மை படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையின்மை உண்டாகும் என்பதால் வாக்குவாதம் செய்யாமல் சற்று பதிலை யோசித்து பேசுவது நல்லது. விளையாட்டு மற்றும் கேளிக்கைகளுக்கு அதிகம் நேரத்தை ஒதுக்கி, செலவுகள் செய்வீர்கள். சகோதரர்களின் உதவி சிலருக்கு கிடைக்கப் பெறுவீர்கள். தொழிற்சங்கத்தின் முக்கியமான பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் வரும். உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். பொருளாதாரநிலை சீராக இருக்கும். தேவைகளுக்கு பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, வடமேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
22-.08.-2025 வெள்ளி இரவு 01-.54 முதல் 25-.08-.2025 திங்கள் காலை 09.58 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிற்றுகிழமைகளில் ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி உளுந்து வடை நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியம் வெற்றியை தரும்.
கும்பம்
குறித்த நேரத்தில் எதையும் செய்து முடிக்க நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசியில் சனி, ராகுவுடன் அமர்ந்து இருப்பதும் இருவரையும் குரு பார்வை பெற்று இருப்பதும் தனித்திறமையுடன் செயல்படும் வலிமையை பெறுவீர்கள். எதையும் யோசித்துக் கொண்டிருக்காமல் வருவது வரட்டும் என்று இனி துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சிம்ம சொப்பனமாக செயல்படுவீர்கள். கடந்த காலத்தை விட சுறுசுறுப்பாக இயங்குவீர்கள்.
உங்களின் பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு அமர்ந்தும், பஞ்சமாதிபதி புதனும், சுகாதிபதி சுக்கிரனும் இணைந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதையும் காரியத்துடன் செயல்படுத்துவீர்கள். தனி உரிமையை கூட விட்டு கொடுக்க மாட்டீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். தொழிலாளர்களின் நலனை பெற்று தருவதில் உரிமையுடன் செயல்பட்டு உதவிகளையும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். யாரிடமும் ஏமாற்றம் அடையாதபடி கவனமுடன் செயல்படுவீர்கள்.
பொது வாழ்விலும் அரசியலிலும் உங்களின் பங்கு சிறப்பாக இருக்கும். எந்த வளர்ச்சியும் உடனே நடக்காது. அதற்கு எம்முடைய உழைப்பு இருக்க வேண்டுமென்று உணர்ந்து செயல்படுவீர்கள். சுறுசுறுப்பான உங்களின் செயல்பாடு எதிரியையும் யோசிக்க செய்யும். உடல் நலனை சரி செய்து கொள்வீர்கள். கலைத்துறையினரின் வளர்ச்சியும், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்தல் போன்ற அறிவு மேன்மை பெறும். சொந்த காலில் நிற்கவே ஆசைப்பட்டு செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி, வியாழன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
25.-08.-2025 திங்கள் காலை 09.59 முதல் 27.-08.-2025 புதன் இரவு 08.19 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாரியம்மன் வழிபாடு செய்து விளக்கு எண்ணெய் தீபமிட்டு அரிசி மாவு வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து மன உருக வேண்டிக் கொள்ள சகல காரியமும் கைகூடும்.
மீனம்
எண்ணியதை எண்ணியபடி அடைய நினைக்கும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதால் செய்யும் தொழிலில் மேன்மை அடைவீர்கள். தனாதிபதி செவ்வாய் ராசியையும் தனஸ்தானத்தையும் பார்ப்பதால் பொருளாதார வளம் பெறுவீர்கள். உங்களின் வளர்ச்சியையும், மனவலிமையும் குறைவின்றி பார்த்துக் கொள்வீர்கள். காலத்தை அறிந்து செயல்படுவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது ஆலோசனைகளை பெற்று முடிவு எடுப்பீர்கள்.
சுகஸ்தானத்தில் சுகஸ்தானாதிபதி புதனுடன் சுக்கிரன் இணைவு பெறுவதும் தொழில் ஸ்தானத்தை குருவோடு இணைவு பெறுவதால் பல்வேறு வித தொழில்களில் ஈடுபாடுகளை கொண்டு பலவிதமான இடங்களில் கிளைகளை உருவாக்கி அதற்குரிய ஆட்களை அமர்த்தி ஆளுமையுடன் செயல்படுவீர்கள். சனியுடன், ராகு விரையஸ்தானத்தில் இருந்தாலும் குரு பார்வையால் வெளிநாடு சென்று வருதல், வெளிநாட்டு தொடர்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.
அட்டம ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருந்தாலும் குரு பார்வை சந்திரனுக்கு பெறுவது மனஅமைதி சிறப்பான செயல்களை தடையின்றி செய்து கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். கலைத்துறையினர் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் சிறிது தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இசை கருவிகளை கொண்டு சிறப்பு வகுப்புகளை எடுத்து புதிய இசை கலைஞர்களை உருவாக்கி தருவீர்கள். மனித நேயத்துடன் பல தர்ம காரியம் செய்வீர்கள். ஆன்மீக யாத்திரை, ஆன்மீக ஈடுபாடு உங்களை பல வழிகளில் ஊக்கபடுத்தும். முக்கிய கால கட்டங்களில் உங்களை ஊக்கப்படுத்தி சரி செய்து கொள்வீர்கள். பண புழக்கம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஒரெஞ்ச், பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன், செவ்வாய்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
27-.08-.2025 புதன் இரவு 08.20 முதல் 30.-08.-2025 சனி காலை 07.55 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வெள்ளை நிற பூ வை சாற்றி, மனதில் உங்களின் கோரிக்கைகளை சொல்லிவர விரைவில் நடக்கும்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM