யூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் அப்ளிகேஷன்ஸ் முகாமையாளர் மலிந்த டயஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் செயற்பாடுகளுக்கான முகாமையாளர் அருண மீமனகே, யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம செயற்பாட்டு அதிகாரி ருமேஷ் மோதரகே, மெடிஹெல்ப் (Medihelp) பிரதம செயற்பாட்டு அதிகாரி நிஷாந்த ஜயமான்ன மற்றும் மெடிஹெல்ப் வியாபார அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளர் லசந்த வடுகே ஆகியோர் காணப்படுகின்றனர்.
இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், மெடிஹெல்ப் ஹாஸ்பிட்டல்ஸ் உடன் கைகோர்த்து, Electronic Medical Examination Report (e-MER) மற்றும் டிஜிட்டல் மருத்துவ பதிவுகள் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் இந்த விருத்தி மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், எளிமையாக்கப்பட்ட, வேகமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய ஆயுள் காப்புறுதி அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்திருந்த e-MER கட்டமைப்பு, பாரம்பரிய காப்புறுதி-மருத்துவ கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் தன்னியக்கமயமான மருத்துவ பரிசோதனை அறிக்கையிடலை டேர்டன்ஸ் வைத்தியசாலையுடன் இணைந்து முன்னெடுத்திருந்தது. தற்போது, இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, தனியார் துறையில் புகழ்பெற்ற நாமமான மெடிஹெல்ப் ஹாஸ்பிட்டல்ஸ் ஐ உள்வாங்கியுள்ளது. அதனூடாக நிறுவனத்தின் புத்தாக்கம் மேலும் விரிவாக்கப்பட்டு, பரந்தளவு மருத்துவ வலையமைப்புக்கு சென்றுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் அணுகலை மேம்படுத்தியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM