பிரதம நீதியரசராக சூரசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை எவ்வகையில் நியாயம் - தயாசிறி ஜயசேகர கேள்வி

Published By: Vishnu

05 Aug, 2025 | 07:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான குழு ஜூலை 21 ஆம் திகதி  விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தது. ஜூலை 22 ஆம் திகதி  பிரதம நீதியரசராக பி.பி.சூரசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இது எவ்வகையில் நியாயமானது என  ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது  தொடர்பான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  பதவி நீக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார் என்பதிலும் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. பதவி நீக்குவதாயின் அதற்கு முறையான வகையில் செயற்பட  வேண்டும்.

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கிய போது நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தவறை தவறென்று சுட்டி க்காட்டும் தற்றுணிவு எங்களுக்கு உண்டு.

2022 ஆம் ஆண்டு  நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு தேசபந்து தென்னக்கோன் பொறுப்புக்கூற வேண்டும். அதிகாரத்தை அவர் முறையற்ற வகையில்  பயன்படுத்தியதால்  அரசியல்வாதிகளின்  வீடுகள் அன்று தீக்கிரையாக்கப்பட்டன.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் தற்போதைய பிரதம நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில்  சிறப்புக்குழு நியமிக்கப்பட்டது.இந்த குழுவுக்கு நான் அன்றே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 09 வழக்குகளை விசாரணை செய்த நீதியரசர் குழாமின் தலைவராக பிரதம நீதியரசர் பி.பி.சூரசேன பதவி வகித்துள்ளார்.

அத்துடன் தேசபந்து தென்னக்கோனை அடிப்படை உரிமை மீறல்  குற்றவாளி என்று  குறிப்பிட்டு பிரதம நீதியரசர் தீர்ப்பளித்துள்ளார். இவ்வாறான நிலையில் அவரை குழுவின் தலைவராக நியமித்தமை சிக்கலுக்குரியது என்பதையே நான் சுட்டிக்காட்டினேன்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்  தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான குழு ஜூலை 21 ஆம் திகதி  விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தது. ஜூலை 22 ஆம் திகதி  பிரதம நீதியரசராக பி.பி.சூரசேன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.இது எவ்வகையில் நியாயமானது.

 பிரதம நீதியரசர் பி.பி.சூரசேனவுடன் எனக்கு எவ்வித தனிப்பட்ட பகைமையும் கிடையாது. அவர் சிறந்த நீதியரசர்.அரசாங்கம் தனது முறையற்ற செயற்பாடுகளுக்கு  நீதித்துறையை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04