இன்றைய சூழலில் மக்களையும் , வாடிக்கையாளர்களையும் நம்பி, கடன் பத்திரம் மூலமாகவோ அல்லது நம்பிக்கையின் பெயரிலோ கடனை வாங்கி, அதனை முதலீடு செய்து தொழிலை தொடங்கி இருப்பார்கள்.
தொடக்கத்தில் லாபத்துடன் சென்ற தொழில் நாளடைவில் தேய்ந்து நஷ்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கும். இந்தத் தருணத்தில் விற்பனை நிலையத்தில் முதலீடு செய்த தொழிலதிபர் நஷ்டத்தை நிறுத்த வேண்டும் என்பதையும், நஷ்டத்தை குறைக்க வேண்டும் என்பதையும் பற்றியும் தான் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பார் . ஆனால் மீண்டும் பழையபடி லாப நிலையை எட்ட வேண்டும் என்றால் அதற்கான அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தருணத்தில் தான் உங்களுக்கு ஆன்மீக முன்னோர்களின் வழிகாட்டல் அவசியமாகிறது. உங்களுடைய விற்பனை நிலையத்தில் எதிரிகளால் மறைமுகமாக ஏவப்பட்டு இருக்கும் எதிர்மறை ஆற்றலின் ஆக்கிரமிப்பு காரணமாக தொழில் மந்த நிலையை எட்டி இருக்கிறது. இதனை துல்லியமாக உணர இயலாமல் ஏன் நஷ்டம் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் தொழில் தொடங்கிய நாளிலிருந்து அருகில் இருக்கும் ஆலயத்திற்கு மூலவரை அபிஷேகம் செய்வதற்காக சந்தனத்தை தானமாக வாங்கித் தர வேண்டும். சிவபெருமானுக்கோ முருக பெருமானுக்கோ அல்லது அம்பாளுக்கோ சந்தன அபிஷேக மேற்கொள்ளப்பட்ட பிறகு உங்களுடைய நஷ்டம் குறைந்து, லாப பாதையை நோக்கி தொழில் செல்லக் கூடும். ஆலயங்களுக்கு சந்தனம் வாங்கிக் கொடுப்பது வலிமையான சுப பலன்கள் வழங்கும் ஆற்றல் கொண்டது.
அதே தருணத்தில் உங்களுடைய விற்பனை நிலையத்தில் நாளாந்தம் இலுப்பை எண்ணெய் மற்றும் வாழைத்தண்டு திரியை கொண்டு தீபமேற்றி வழிபட்டால் நஷ்டம் குறைந்து லாபம் உண்டாகும்.
இந்த இரண்டு எளிய உத்திகளையும் உறுதியாக பின்பற்றினால் ஓராண்டிற்குள் அனைத்து நஷ்டமும் சீரமைக்கப்பட்டு லாபம் வரத் தொடங்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM