தனியறையில் சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் சுனில் வட்டகல

05 Aug, 2025 | 05:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

தந்தைக்கும்,  சித்தப்பாவுக்கும் ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள்  பிரதம  நீதியரசர்   சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில்  பதவி நீக்கப்பட்டதை நாமல்  ராஜபக்ஷ  அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளது. தனியறையில் இருந்து சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ஷ முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்  பிரதி அமைச்சர்   சட்டத்தரணி   சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (05) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது  தொடர்பான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

துர்நடத்தை குற்றவாளியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்கு 2002 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க  அலுவலர்களை அகற்றும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது சட்டவிரோதமானது, பாராளுமன்ற நிலையியல் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று  நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

தந்தை மற்றும் சித்தப்பாவுக்கு ஏற்றாட் போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர்   சிரானி பண்டாரநாயக்க  சட்டவிரோதமான முறையில்  பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்ஷ அறியாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.ராஜபக்ஷர்கள் எவ்வாறு  சட்டத்தை செயற்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

சட்டவிரோதமான முறையில்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பான விவாதம் நடத்தப்படுவதாக  நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.  தேசபந்து  தென்னக்கோனின் துர்நடத்தை தொடர்பில் தான் 2002 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க  அலுவலர்களை அகற்றும்  சட்டத்தின்  பிரகாரம்  நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த விடயத்தை  பாராளுமன்றத்தில்  விவாதிப்பதால்  நீதிமன்ற    விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று  சிறப்புக்குழு அறிக்கை  சமர்ப்பித்துள்ளது.

தனியறையில் இருந்து சட்டக் கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ஷ முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24