வத்தளையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை ; வாள்களுடன் இளைஞன் கைது

05 Aug, 2025 | 03:54 PM
image

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்திற்கு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (04) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வத்தளை  அவரகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வத்தளை - ஹேகித்த பிரதேசத்திற்கு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் வத்தளை  அவரகொட்டுவ பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 4 வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50