நுவரெலியா பரத கலாலயத்தின் 7வது பரத நாட்டிய அரங்கேற்றம், ஞாயிற்றுக்கிழமை (03) நுவரெலியா நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விஜயரத்னம் திவேனியா, ரமேஷ் யோகசிவடிலானி, புகழேந்திரன் சதுர்ஷனா, சந்திரபோஸ் மல்லிகாதேவி, சிவானந்தன் வர்மவிதுர்ஷன், திருச்செல்வம் லக்ஷிகா, மற்றும் கிட்னன் விஜயராஜ் கார்த்திகாயினி ஆகிய மாணவர்கள் புஷ்பாஞ்சலி முதல் மங்களம் வரை பரதநாட்டியத்தின் முக்கிய உருப்படிகளை அரங்கேற்றினர்.
மாணவர்களை வழிநடத்தியதும் நாட்டிய பயணத்திற்கு வித்திட்டதும் பரத கலாலயத்தின் நிறுவனர் முதுகலைமானி ஸ்ரீமான் ரமேஷ்காந்த் ஆவார். இசை, வயலின், மிருதங்கம், ஒளி ஒலி, உடையலங்காரம் உள்ளிட்ட ஒத்துழைப்பாளர்களின் பங்களிப்பும் விழாவை சிறப்பாக்கியது.
பிரதம அதிதியாக யுவகலாபாரதி, நாட்டியாசாரி ஸ்ரீமதி ஸ்ரீதரி லலிதன் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். தீபானந்தா கலாலயா நிறுவுனர் திருமதி நடராஜன் தீபகயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பரதநாட்டியத்தின் ஆன்மீகமும், பாரம்பரியத்தோடும் இணைந்த விழா பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM