வவுனியாவில் சுகாதார சீர்கேடான முறையில் பெருந்தொகையான மாட்டறைச்சி கைப்பற்றல்

05 Aug, 2025 | 09:25 AM
image

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 558 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி திங்கட்கிழமை (04) மாநகரசபையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த தனியார் பேருந்தில் சுகாதார சீர்கேடான முறையில் பெருந்தொகை மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.

அவை வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்லப்படவிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபைக்கு பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு சென்ற மாநகரசபையின் பிரதிமுதல்வர்  மற்றும் சபை உறுப்பினர் ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன் இறைச்சியினை பறிமுதல் செய்தனர். 

மீட்கப்பட்ட இறைச்சியின் நிறை சுமார் 558 கிலோ என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த இறைச்சிகள் சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு மாநகரசபையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனை கொண்டுவந்த நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன...

2025-12-17 15:24:31
news-image

வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி...

2025-12-17 15:03:28
news-image

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-17 12:38:35
news-image

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை...

2025-12-17 14:58:54
news-image

காட்டு யானை மீது மோதி இரு...

2025-12-17 14:53:44
news-image

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க...

2025-12-17 15:19:50
news-image

கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச்...

2025-12-17 14:45:50
news-image

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் காலவகாசம் நீடிப்பு

2025-12-17 14:11:51
news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31