இன்றைய திகதியில் அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால்... அதற்கான காத்திருப்பு என்பது நீண்டது. அதன் பிறகு திறமை இருந்தாலும் அதிர்ஷ்டமும் அவசியமாகும். இந்நிலையில் எம்மில் பலரும் தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்துடன் கிடைக்கும் வேலையை செய்வதிலும் அல்லது குறைந்த வருவாய் கிடைக்கும் சுய தொழிலை மேற்கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது நிரந்தரமில்லை என்பதை முழுதாக உணர்ந்து கொண்டு தான் பணியாற்ற தொடங்குகிறார்கள் . இந்நிலையில் வேலை வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைப்பதற்கும் எம்முடைய முன்னோர்கள் சில சூட்சம வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்மொழித்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: ஒரு வாயகன்ற தாமிர பாத்திரம், தண்ணீர், குங்குமம், நாட்டுச் சர்க்கரை. சிவப்பு வண்ண மலர்கள்.
ஞாயிற்றுக் கிழமையைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். சூரிய உதயத்திற்கு பின்னரான 30 நிமிடங்களுக்கு பிறகு நீராடி ஒரு தாமிர பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள்.
அதில் சிவப்பு வண்ண மலர்களையும், ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரையையும், ஒரு ஸ்பூன் குங்குமத்தையும் இட்டு கலக்கிக் கொள்ளுங்கள். இதன் பிறகு இந்த பாத்திரத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசை நோக்கி நின்று சூரிய பகவானின் மந்திரத்தை அல்லது' ஓம் சூரிய பகவாய நமக ' அல்லது 'ஓம் சூரியதேவனே போற்றி ' என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து, வேலை கிடைக்க வேண்டும் என்ற ஒற்றைப் பிரார்த்தனையை சமர்ப்பணம் செய்யுங்கள்.
இந்த பிரார்த்தனையை தினமும் ஒரே தருணத்தில் தொடர்ச்சியாக 43 நாட்கள் மேற்கொள்ள வேண்டும் .அதன் பிறகு ஐந்து நாட்களுக்குள் உங்களுக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் அல்லது அதற்கான சூழல் உருவாகும். இத்தகைய தருணத்தில் நீங்கள் நேர்காணலுக்கு சென்று இருந்தால்.. அவை வெற்றியைத் தரும். உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது உறுதியாகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM