காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்கு சட்ட விரோதமான முறையிலமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் மாட்டிய இரு பிள்ளைகளின் தந்தை உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய பொலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி இரவு 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள குறித்த நபர் வீடு திரும்பாததால் மறுநாள் காலை முதல் அவரை தொடர்ந்து தேடி உள்ளனர். பின்னர் அவரின் சடலம் வயல் வெளியில் இருந்ததை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற் கொண்ட பொலீஸார் அவ் விடத்தில் சட்ட விரோதமான முறையில் மின் கம்பி இணைக்கப்பட்டிருந்ததையும் கண்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஏ.எம். நவரத்ன என்ற 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணை இடம் பெற உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM