பொகவந்தலாவையில் கழிப்பறை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு 

Published By: Digital Desk 3

04 Aug, 2025 | 12:45 PM
image

பொகவந்தலாவை கிவ் தோட்டபகுதியில் வீடொன்றின் அருகில் இருந்த ஆறு அடி ஆழமுள்ள கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் தரம்  3ல் கல்வி கற்கும் ஹெலோன் சாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைநீர் தேங்கி இருந்த அந்த குழியில் சிறுவன் வழுக்கி விழுந்துள்ளார்.

சிறுவனை நீண்ட நேரம் காணாத தந்தை கவலையடைந்து அவனைத் தேட  ஆரம்பித்துள்ளார். இதன்போது, மாலை 5:00 மணியளவில், குழிக்கு அருகில் தனது மகனின் காலணிகள் இருப்பதைக் கண்டுள்ளார். குழியில் பார்த்தபோது, தனது மகன் நீரில் மூழ்கி இருப்பதைக் கண்டு உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடி சிறுவனை வெளியே எடுத்துள்ளார்.

சிறுவனை உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது,  சிறுவன் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவை  பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்ற சுயாதீன விவகாரத்தில் சர்வதேச கோரிக்கைக்கு...

2026-08-20 04:33:10
news-image

மாத்தறை காணி முறைகேடு விவகாரம்: பஷில்...

2026-08-20 04:20:55
news-image

சுகாதாரத்துறையினர் கலாசாரத்தைப் பேணும் வகையில் ஆடை...

2026-08-20 04:17:26
news-image

புதிய கண்டுபிடிப்புகள் தேசிய வளர்ச்சிக்கு அத்தியாவசியம்...

2026-08-20 03:50:23
news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50