இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 63 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை லொறியில் கடத்திச் சென்ற சந்தேக நபர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஆலங்குடா கடற்கரையிலிருந்து கரம்பை பகுதி ஊடாக சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி குருக்னம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவர்.
குறித்த லொறியிலிருந்த 16 பைகளில் இருந்து 537 கிலோ உலர்ந்த இஞ்சி, 2 பைகளில் 65 கிலோ உலர்ந்த மஞ்சள் மற்றும் 9 பைகளில் 309 கிலோ பீடி இலைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
இந்த பீடி இலைகளின் பெறுமதி சுமார் 40 இலட்சம் என்றும், உலர்ந்த இஞ்சியின் பெறுமதி 20 இலட்சம் என்றும், உலர்ந்த மஞ்சளின் மபெறுமதி 3 இலட்சம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM