கிழக்கு ஆபிரிக்காவில் ஜாம்பியா விக்டோரிய நீர் வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பூங்காவில் பல வகையான உயிரினங்களை அந் நாட்டு அரசாங்கம் பராமரித்து வருகின்றது.

நீர் வீழ்ச்சியை அண்மித்த பூங்கா என்பதாலும் அங்கு பல் வகையான மிக அரிய வகை விலங்குகள் காணப்படுவதால் அனைவரினதும் கவனத்தை இப் பூங்கா ஈர்த்துள்ளதோடு இப் பகுதி அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கவர்ந்த  சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.

இப் பகுதிக்கு லிவிங்ஸ்டோன் பகுதியில் உள்ள 180 மெகா - வோட்ஸ் கொண்ட நீர் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் இருந்து நீர்மின் நிலையத்திற்குள் நுழைந்த பபூன் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்று நீர்மின் நிலையத்தில் உள்ள மின்சார உற்பத்தியாக்கி இயந்திரத்தை தவறுதலாக தொட்டுள்ளது. இதன் காரணாமாக குரங்கின் உடலில் மின்சாரம் பாய்ந்ததோடு மின்சார உற்பத்தியாக்கி இயந்திரம் சேதமடைந்தது. இச் சம்பவத்தினால் காயமடைந்த குரங்கிற்கு பூங்கா வைத்தியர்கள் சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் மின் உற்பத்தியாக்கி இயந்திரம் சேதமாகியதன் காரணமாக சுமார் ஐந்து மணி நேரமாக 40 ஆயிரம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியன. இதனால் சுற்றுலா பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.