ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் மும்முனை தொடர் வெல்லாகே, கமிந்து, அசலகன்க ஆகியோர் தலைமையில் மூன்று அணிகளுக்கான குழாம்கள்

04 Aug, 2025 | 09:04 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் விசேடமாக ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள மூன்று அணிகளுக்கான குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸிமபாப்வேக்கு எதிரான தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட், அடுத்த வருடம் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஆகியவற்றுக்கு அதிசிறந்த வீரர்களைத் தெரிவுசெய்வதை நோக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் (SLC T20 League) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இம் மாதம் 7ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுளள ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் உள்ளூர் மும்முனைத் தொடரை முன்னிட்டு மூன்று நிறங்களிலான பெயர்கள் அணிகளுக்கு சூட்டப்பட்டுள்ளதுடன் அவற்றின் தலைவர்கள் நியமிக்கப்பட்டு குழாம்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று குழாம்களில் பெயரிடப்பட்டுள்ள வீரர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், கண்டியைச் சேர்ந்த மொஹமத் ஷிராஜ் ஆகிய இருவர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

டீம் ப்ளூஸ் அணிக்கு துனித் வெல்லாகேவும் டீம் க்றீன்ஸ் அணிக்கு கமிந்து மெண்டிஸும் டீம் க்றேஸ் அணிக்கு சரித் அசலன்கவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழாம்களில் தேசிய வீரர்கள், ஏ அணி வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

ஆகஸ்ட் 7ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை இந்த மூன்று அணிகளும் ஒன்றையொன்று நான்கு தடவைகள் லீக் சுற்றில் எதிர்த்தாடும்.

லீக் சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

குழாம்கள் விபரம்

டீம் புளூஸ் (Team Blues): பெத்தும் நிஸ்ஸங்க, விஷேன் ஹலம்பகே, தனஞ்ஜய டி சில்வா, அஹான் விக்ரமசிங்க, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே (தலைவர்), ஜெவ்ரி வெண்டசே, அக்கில தனன்ஜய, மதீஷ பத்திரண, அசித பெர்னாண்டோ, டில்ஷான்ன் மதுஷன்க, லிலன் ரங்கன, மொஹமத் ஷிராஸ், ரவிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, நிஷான் மதுஷ்க, செனித்த ஹலம்பகே.

டீம் கிரீன்ஸ் (Team Greens) குசல் மெண்டிஸ், லசித் குரூஸ்புள்ளே, சல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ் (தலைவர்), சாமிக்க கருணாரத்ன. துஷான் ஹேமன்த, ட்ரவீன் மெத்யூஸ், நுவான் துஷார, துஷ்மன்த சமீர, பிரமோத் மதுஷான், ஜனித் லியனகே, துலாஜ் சமுதித்த, தரிந்து ரத்நாயக்க, நிமேஷ் விமுக்தி, காமில் மிஷார, லஹிரு மஷன்க, சொனால் தினூஷ.

டீம் க்ரேஸ் (Team Greys) தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு உதார, நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலன்க (தலைவர்), ரமேஷ் மெண்டிஸ், சமிந்து விக்ரமசிங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்ஷன, ஏஷான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ, கருக்க சன்கேத், மோவின் சுபசிங்க, மிலான் ரத்நாயக்க, மெலன் ஹன்சக, சஹான் ஆராச்சிகே, ஷெவோன் டேனியல், ஸ்நேத் ஜயவர்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47