திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில் வைத்து ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் விறகு எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றபோது யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வெருகல் -சேனையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி கனகராசா (வயது 69) என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM