யாழ்ப்பாணம் நல்லூர் கோயில், நாகவிகாரை மற்றும் யாழ். நூலகத்திற்கு பிரதமர் விஜயம்

Published By: Vishnu

04 Aug, 2025 | 03:16 AM
image

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (03) முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். ஸ்ரீ நாகவிகாரை மற்றும் யாழ். நூலகம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு இன்று காலை சென்ற பிரதமர், அங்கு ஆசி பெற்றார். வருடாந்தத் திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்குச் சென்று ஆசி பெறுவது ஒரு பாக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், யாழ்ப்பாணம் நாக விகாரை சர்வதேச பௌத்த மையத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், விகாராதிபதி சங்கைக்குரிய மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து, புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அவருக்கு விளக்கமளித்தார். வட மாகாணத்தில் சமய மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்காக நாக விகாரை முன்னெடுத்து வரும் செயற்றிட்டங்களைப் பாராட்டிய பிரதமர், 

தேசிய ஒற்றுமைக்கு மொழி மிகவும் முக்கியமானது என்றும், எனவே, புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் மொழி ஒரு செய்முறைப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பொது நூலகத்தைப் பார்வையிட்ட பிரதமர், அங்கு வருகை தந்திருந்த பிள்ளைகளுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதனால் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 16:25:42
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22