(நெவில் அன்தனி)
இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான ஜாம்பவான்கள் உலக சம்பியன்ஷிப்பில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணியை 9 விக்கெட்களால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா சம்பியன்ஸ் அணி, ஜாம்பவான்கள் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
ஏ. பி. டி வில்லிர்ஸ் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதம் தென் ஆபிரிக்கா சம்பியன்ஸ் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தது.
பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (02) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் சாஜீத் கான் 76 ஓட்டங்களையும் உமர் அமின் 36 ஓட்டங்களையும் அசிவ் அலி 28 ஓட்டங்களையும் ஷொயெப் மாலிக் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வேய்ன் பார்னல் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்டஸ் வில்ஜோயென் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
196 ஓட்டங்ளை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சம்பியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.
ஏ. பி. டி வில்லியர்ஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹஷிம் அம்லா 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஏ. பி. டி வில்லியர்ஸ், ஜீன்-போல் டுமினி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சம்பியன் ஸ்தானத்திற்கு உயர்த்தினர்.
அதிரடிக்கு பெயர்பெற்ற ஏ. பி. டி வில்லியர்ஸ் 60 பந்துகளில் 12 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 120 ஓட்டங்களைக் குவித்தார்.
ஜேபி டுமினி 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM