அண்டர்சன் - டெண்டுல்கர் தொடரை கைப்பற்ற இங்கிலாந்துக்கு 35 ஓட்டங்களும் சமப்படுத்த இந்தியாவுக்கு 4 விக்கெட்களும் தேவை

Published By: Vishnu

04 Aug, 2025 | 12:12 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரைக் கைபற்ற கடைசி டெஸ்டில் இங்கிலாந்துக்கு 35 ஓட்டங்களும் சமப்படுத்த இந்தியாவுக்கு 4 விக்கெட்களும் தேவைப்படுகிறது.

கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐந்தாவதும் கடைசியுமான இந்த டெஸ்ட் போட்டியில் 374 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்ததுடன் நான்காம் நாளன்றே வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்தின் அடுத்த 3 விக்கெட்களை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதால் போட்டியில் எந்த அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஸக் க்ரோவ்லி (14), பென் டக்டெக் (54), பதில் அணித் தலைவர் ஒல்லி போப் (27) ஆகிய மூவரும் 106 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்ததும் இங்கிலாந்து நெருக்கடியை எதிர்கொண்டது.

எனினும், ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகிய இருவரும் மிகத் திறமையாக இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 4ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியை நல்ல நிலையில் இட்டனர்.

அவர்கள் இருவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ஹெரி ப்றூக் 98 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 111 ஓட்டங்களை விளாசினார். இது அவர் பெற்ற 10ஆவது டெஸ்ட் சதமாகும்.

அவரைத் தொடர்ந்து ஜேக்கப் பெத்தல் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய மூத்த அனுபசாலியான ஜோ ரூட் 152 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் உட்பட 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் இங்கிலாந்து மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது.

158ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 39ஆவது சதத்தைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த சற்று நேரத்தின் பின்னர் திடீரென இருள் சூழ்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களையும் இங்கிலாந்து 247 ஓட்டங்களையும் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களையும் பெற்றன.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 224 (கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38, வொஷிங்டன் சுந்தர் 26, கஸ் அட்கின்சன் 33 - 5 விக்., ஜொஷ் டங் 57 - 3 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஸக் க்ரோவ்லி 64, ஹெரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ ரூட் 29, ப்ரசித் கிரிஷ்ணா 62 - 4 விக்., மொஹம்மத் சிராஜ் 86 - 4 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவிந்த்ர ஜடேஜா 53, வொஷிங்டன் சுந்தர் 53, த்ருவ் ஜுரெல் 34, ஜொஷ் டங் 125 - 5 விக்., கஸ் அட்கின்சன் 127 - 3 விக்., ஜெமி ஓவர்ட்டன் 98 - 2 விக்.)

இங்கிலாந்து - வெற்றி இலக்கு 374 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 339 - 6 விக். (ஹெரி ப்றூக் 118, ஜோ ரூட் 103, பென் டக்கெட் 54, ப்ரதிஷ் கிரிஷ்ணா 109 - 3 விக்., மொஹமத் சிராஜ் 95 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54