மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறப்பு

03 Aug, 2025 | 05:48 PM
image

நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக  மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இரண்டு  வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு  வான் கதவுகள்  ஞாயிற்றுக்கிழமை  (03) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது இதனால்  நீர்த்தேக்க அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும்  பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்து பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு...

2026-08-12 06:09:34
news-image

இன்றைய வானிலை 

2026-08-12 05:58:11
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்:...

2026-08-12 05:53:03
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பொறிக்குள்...

2026-08-12 05:48:40
news-image

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத்...

2026-08-12 05:45:38
news-image

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: இறுதி...

2026-08-12 05:41:45
news-image

சவூதி அரேபியாவில் தொழில் எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காகநடத்தப்படும்...

2026-08-12 05:19:24
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43