எம்மில் ஒரு சிலருக்குப் பேசிக் கொண்டிருக்கும் போதோ அல்லது பாடிக்கொண்டிருக்கும் போதோ திடீரென்று குரல் அடைத்து பேசமுடியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிடுவர். இத்தகைய குறைபாட்டிற்கு மருத்துவத்துறையில் Balbar Palsy என்று பெயர். இதற்கு பக்கவாதத்திற்கு காரணமான botulism என்ற இரசாயனமே இதற்கும் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் அண்மைய ஆய்வுகளில் மரபணு குறைபாடுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதற்கென தனியாக மருத்துவ சிகிச்சை முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும், தசை பிடிப்பிற்கான சிகிச்சை, நரம்புகளின் பணியை மறு சீராக்கும் சிகிச்சை என்ற இயன்முறை சிகிச்சைகளும், உடலியல் சிகிச்சை (Physical Therapy) பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வலி நிவாரண சிகிச்சைகளின் மூலமே பலரும் இதிலிருந்து குணமாகி வருகிறார்கள். ஒரு சிலருக்கு பேச்சு பயிற்சி வழங்கப்படவேண்டிய அவசியமும் ஏற்படும். கழுத்து மற்றும் மூளையிலுள்ள ஒரு சில நரம்புகளில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவே இவை ஏற்படுகின்றன. அதற்குரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சைகளை வழங்கி வருகிறார்கள்.

Dr. கோடீஸ்வரன் 

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்