நுவரெலியாவில் போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

03 Aug, 2025 | 02:23 PM
image

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திவுலபிட்டி டிப்போக்கு சொந்தமான குறித்த பேருந்து வெளிமடையிலிருந்து நுவரெலியா வழியாக மீகமுவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதியின் நடத்தை குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் நுவரெலியா பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்து பஸ்ஸில் சாரதி இருக்கையில் பின்புறம் சந்தேக நபர்  பயன்படுத்திதிய போத்தலில்  மிகுதியாக இருந்த சட்டவிரோத மதுபானமும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி...

2026-07-11 11:53:15
news-image

பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி...

2026-07-11 11:24:47
news-image

'மாறிவரும் உலகுடனான ஒத்திசைவு ' –...

2026-07-11 11:45:22
news-image

சிறைக் கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு:...

2026-07-11 11:25:25
news-image

தீயணைப்பு அவசர இலக்கத்தில் கோளாறு ;...

2026-07-11 11:09:58
news-image

'எல் நினோ' காலநிலை மாற்றம் தீவிரம்...

2026-07-11 10:17:48
news-image

கட்டுநாயக்கவிலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி...

2026-07-11 10:32:25
news-image

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் 19 வயது இளைஞன்...

2026-07-11 09:10:26
news-image

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத...

2026-07-11 08:55:42