இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரங்கண ஹேரத் தலைமைதாங்கவுள்ளார்.

காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் அவர் இந்திய அணிக்கெதிரான முதலிரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளையடுத்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் டினேஷ் சந்திமல் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், அவர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அசங்க குருசிங்கவிடம் கேட்ட கேள்விக்கு, டினேஷ் சந்திமல் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஓரிரு திங்களில் குணமடைந்து இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவாரென தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.