சுங்கத்திணைக்களத்துக்கு 1,200 பில்லியன் ரூபா வருமானம் - சுங்க பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவிப்பு

03 Aug, 2025 | 11:45 AM
image

(எம்.மனோசித்ரா)

சுங்கத்திணைக்களம் 7 மாதங்களில் 1,200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தில் மாத்திரம் 231 பில்லியன் ரூபா அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவ்வாண்டு சுங்கத் திணைக்களத்துக்கான வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுங்க பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார்.

கொழும்பில்  சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 1,227 பில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை சுங்க திணைக்களம் வருமானமாகப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை வரலாற்றில் முதன் முறையாக ஒரே மாதத்தில் அதிக வருமானமாக 231 பில்லியன் ரூபா சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரே மாதத்தில் இவ்வாறு அதிகூடிய கிடைக்கப் பெற்றதில்லை. இவ்வாண்டு எமது வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபாவாகும்.

அந்த இலக்கில் தற்போது 1,227 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் திகதி வரை எட்டப்பட வேண்டிய இலக்கை விட 116 பில்லியன் ரூபா அதிக வருமானம் கிடைத்துள்ளது. அந்த வகையில் விரைவாக எமது இலக்கை அடைய முடியும் என்று நம்புகின்றோம். வாகன இறக்குமதியூடாகவே அதிக வருமானம் கிடைத்துள்ளது. அந்த வகையில் வாகன இறக்குமதியூடாக 300 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

28,00க்கும் அதிக வாகனங்கள் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர்ந்தும் காணப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனமொன்று மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்துக்கு சுங்கத் திணைக்களம் மாத்திரமே காரணமல்ல. ஏனைய நிறுவனங்கள், திணைக்களங்களில் பங்களிப்பும் அதில் உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து முறையாக செயற்படும் பட்சத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படக் கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30