நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

03 Aug, 2025 | 11:46 AM
image

பொலன்னறுவை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த பாடசாலை மாணவர்கள்  உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு 25  மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு ஒவ்வாமையினால் சனிக்கிழமை (02)  மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிகிச்சைகளுக்காக அவர்கள் அனைவரையும்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் சிகிச்சைகளின் பின் தங்களுடைய தங்கியிருந்த  இருப்பிடத்துக்கு சென்றுள்ளதாகவும், 15 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் , எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலன்னறுவை பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தமாக 73 பேர் வருகை தந்துள்ளனர். 

இவர்கள் வெள்ளிக்கிழமை (01) காலை முதல் நுவரெலியா அம்பேவளை பகுதியினை சுற்றி பார்வையிட்டதன் பின்னர் மாலையில் அம்பேவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு வாங்கி உட்கொண்டுள்ளனர்.

அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டது என தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பில் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  நுவரெலியா பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: துப்பாக்கிச் சூடு...

2026-07-16 06:06:05
news-image

மாகாண சபைக தேர்தல் முறை குறித்து...

2026-07-16 06:01:13
news-image

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறைந்த...

2026-07-16 05:54:15
news-image

பலவந்தத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு...

2026-07-16 05:50:51
news-image

ஊழியர் நிதியங்களை ஒன்றிணைத்து தனியார்மயமாக்க போவதாக...

2026-07-16 05:43:47
news-image

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் எம்.பி. சாணக்கியன் சந்திப்பு

2026-07-16 05:40:55
news-image

சிறைச்சாலைச் சட்டங்களில் மாற்றம் குறித்து அரசு...

2026-07-16 05:35:52