செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை

03 Aug, 2025 | 09:37 AM
image

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு:  

மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால்,  கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்

பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. 

மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03