இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் கசினோ விடுதிகளில் சீன பிரஜைகளுக்கு ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பிரதான போதைப்பொருள் வர்த்தகரை கொழும்பு தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட நபர் சீன நாட்டவர் என்றும், அவர் நீண்ட காலமாக நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சீன நாட்டினருக்கு ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு மோசடி தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் இருந்து 50 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
மாலைத்தீவு மற்றும் இலங்கையரிடமிருந்து போதைப்பொருட்களை பெற்று, இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் கசினோ விடுதிகளுக்கு செல்லும் சீன நாட்டினருக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சீன பிரஜை, தற்போது வரை சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பதாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM