கடன் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான பிரத்யேக வழிபாடு..!

02 Aug, 2025 | 04:37 PM
image

மக்கள் நாளாந்தம் வெவ்வேறு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறார்கள். அதிலும் கடன் வாங்கிவிட்டு அந்த கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த இயலாத போது.. கடன் கொடுத்தவர்கள் சுடு சொற்களால் எம்மை நிந்திக்கும் போது எம்மிடம் இயல்பாகவே இருக்கும் மனித வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனுடன் உளவியல் வலிமையும் இழந்து விடுகிறோம்.

கடன் வாங்குவதை இத்தகைய தருணங்களில் தான் 'கடன் வாங்கியது மாபெரும் பிழை' என உணர்கிறோம். மற்றவர்களிடம் உதவி கேட்டாலும் அல்லது இது தொடர்பான உளவியல் நெருக்கடிகளுக்கு வழிகாட்டுதல் தொடர்பான ஆலோசனைகளை பெற விரும்பினாலும் இதற்கு உரிய பதிலை வழங்குவதில்லை. இத்தகைய சூழலில் எம்முடைய முன்னோர்கள் பிரத்யேக இறை வழிபாட்டின் மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தை அவர்கள் பிறந்த நித்ய நாம யோகம் தான் தீர்மானிக்கிறது. நீங்கள் கழுத்தளவு கடனை வாங்கி இருந்தாலும் குறிப்பிட்ட நித்ய நாம யோகத்தில்... குறிப்பிட்ட கடவுளை வணங்கினால்... கடன் தொல்லையிலிருந்து மீள இயலும்‌ அதாவது 27 நாம யோகங்களில் 14 ஆவதாக இடம்பெறும் ஹர்சன நாம யோகம் எனும் நாம யோகம் நடைபெறும் தருணத்தில்.. அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் சன்னதிக்கு சென்று அவரை மனதார பிரார்த்திக்க வேண்டும்.

'கடன் சுமை குறைந்திட அருள் பாலிக்க வேண்டும்' என பிரார்த்தனை செய்தால்.. 14 நாட்களுக்குள் உங்களுடைய பிரச்சனையின் தீவிரம் குறைவதை அனுபவப் பூர்வமாக உணரலாம். இதனையடுத்து மீண்டும் ஹர்சன நாம யோகத்தில் ஆஞ்சநேயருக்கு கடன் சுமையிலிருந்து விடுவித்ததற்காக நன்றி தெரிவித்து வெண்ணெய் காப்பு + வெற்றிலை மாலை அணிவித்து, அவருக்கு பிடித்த நிவேதனத்தை படைத்து வணங்கிட வேண்டும்.

கடன் சுமை எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ..! அப்போதெல்லாம் ஹர்சன நாம யோகமும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் ... உங்களுக்கான நிவாரணம் முழுமையாக கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களத்திர தோஷம் நீங்க எளிய வழிமுறை...

2026-11-13 15:11:21
news-image

வியாபாரம் செழித்து வளர்வதற்கான பிரத்யேக வழிமுறை 

2026-11-12 15:05:59
news-image

போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான எளிய...

2026-11-11 16:43:16
news-image

பகிர்ந்து கொள்ள இயலாத சிக்கலில் இருந்து...

2026-11-10 15:50:28
news-image

தன வரவு அதிகரிக்கவும், சேமிப்பு உயரவும்...

2026-11-09 16:35:58
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் செப்டிக் ஒர்தரைடீஸ் எனும்...

2026-11-09 16:35:51
news-image

பொருளாதார பற்றாக்குறையை தீர்க்கும் சூட்சம வழிமுறை

2026-11-07 15:47:03
news-image

இருளிலிருந்து ஒளியை நோக்கி : தீபாவளியின்...

2026-11-07 10:35:13
news-image

சுப பலன்களும் கால பகை கிரகங்களும்...

2026-11-06 18:16:42
news-image

கணவன் - மனைவி இடையேயான பிரச்சினையை...

2026-11-05 17:55:25
news-image

தொழில் தடையை நீக்கும் பிரத்யேக அம்மன்...

2026-11-04 14:38:07
news-image

கடன் சுமையை நீக்கும் எளிய வழிமுறை..!?

2026-11-03 14:29:06