5வது சவூதி ஊடக மன்றம் 2026ஆம் ஆண்டு ரியாத்தில் நடைபெறுகிறது – மன்னரின் அனுசரணையில் உலக ஊடக நிபுணர்கள் ஒன்றுகூடல்

Published By: Digital Desk 2

02 Aug, 2025 | 05:03 PM
image

உலக ஊடகத்துறையின் மிக முக்கிய கலந்துரையாடல்களுக்கான ஒரு வேதிகையாக 5வது சவூதி ஊடக மன்றம் (Saudi Media Forum 2026), 2026 பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு, இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸின் அனுசரணையில் நடைபெறவுள்ளதாகவும், சவூதி ஊடகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் உள்நாட்டு, மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய ஊடக, தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஊடகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பல்வேறு தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெறவுள்ளன.

"மாற்றங்கள் காணும் உலகில் ஊடகம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு (AI), Extended Reality (XR) மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் புதிய முன்னேற்றங்களை வெளிக்கொணரவுள்ளது.

சவூதி ஊடக அமைச்சர் ஸல்மான் அல்-தோசரி, இது சவூதி அரேபியாவின் போட்டித் திறன் மிக்க ஊடக சூழலை உருவாக்கும் தூரநோக்கின் ஒரு முக்கிய மூலோபாயமாக அமைகிறது என தெரிவித்துள்ளார். மேலும், இது விஷன் 2030 திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மீடியா மன்றத் தலைவர் மற்றும் சவூதி ஒளிபரப்புக் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மத் அல் ஹார்த்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் XR ஆகியவை ஊடக உள்ளடக்கங்கள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆழமாக ஆராய்வதே மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என தெரிவித்தார்.

இம்மாநாடு சர்வதேச ஒத்துழைப்புகள், தொழில்முறை வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்களை ஊக்குவிக்க, ஒரு முன்னணி தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43