'அமரன் 'படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ' மதராஸி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'சலம்பல..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும்' மதராஸி' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் , ருக்மணி வசந்த் , வித்யுத் ஜம்ப்வால் , பிஜு மேனன், சபீர் , விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுதீப் இலாமோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ' சலம்பல சலம்பல அடியே கண்ணம்மா.. 'எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான சாய் அபயங்கர் பாடியிருக்கிறார்.
அனிருத்தின் மாயாஜால தாள லயத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இந்த பாடலுக்கான ப்ரோமோ காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பதும், மதராஸி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM