பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு எட்டுவது தொடர்பாக தெளிவான அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும் - ஐக்கிய தேசிய கட்சி

01 Aug, 2025 | 05:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்காவின் தீர்வை வரியை குறைத்துப் பெற்றுக்கொள்ள செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அர்த்தமுல்ல பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு எட்டுவது தொடர்பாக தெளிவான அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விடுவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவுக்கமைய பரஸ்பர தீர்வை வரி வீதத்தை மேலும் மாற்றிக்கொண்டிருப்பதை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொள்கிறது.

அதுதொடர்பான கலந்துரையாடல்களை சாதகமான முறையில் முடித்துக்கொண்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கும் கலந்துரையாடல் குழுவுக்கும்  நாங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய உத்தரவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

“ சில வர்த்தக பங்காளிகள் அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் அல்லது இணங்குவதற்கு நெருக்கமாக உள்ளனர்”.

அதேநேரம்  2 (ஆ) பந்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

“இந்த உத்தரவின் முதலாவது இணைப்பில், இனம் காணப்பட்டுள்ள சில வெளிநாட்டு வர்த்தக பங்காளிகள் ஐக்கிய அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு இணங்கியுள்ளனர். அல்லது முடிவடைய நெருங்கியுள்ளது. 

அந்த ஒப்பந்தம் முடிவடையும் வரை வர்த்தக பங்காளிகளின் பொருட்கள் இந்த உத்தரவின் முதலாது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக தன்னார்வ வரிகளுக்கு உட்பட்டு இடம்பெறவுள்ளதுடன் அந்த ஒப்பந்தங்களின் விதிமுறைகளை நினைவு கூர்ந்து, பின்னர் நான் உத்தரவுகளை வெளியிடுவேன்”

இந்தப் பின்னணியில், அர்த்தமுள்ள வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: துப்பாக்கிச் சூடு...

2026-07-16 06:06:05
news-image

மாகாண சபைக தேர்தல் முறை குறித்து...

2026-07-16 06:01:13