தயாரிப்பு : சின்னத்தம்பி புரொடக்சன்
நடிகர்கள் : வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா சுரேந்திரன் மற்றும் பலர்.
இயக்கம் : அனீஸ் அஸ்ரப்
மதிப்பீடு : 2/5
சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும் , சிங்கப்பூர் நாட்டின் தேசிய ஆணழகன் பட்டத்தை வென்றவருமான மகேஸ்வரன் தேவதாஸ் நடிகராக அறிமுகமாகி இருக்கும் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மதுரையை சார்ந்த குற்ற புலனாய்வு தொடர்பான நாவலை எழுதி பிரபலமான எழுத்தாளர் ஜீவன் குமாரின் வாரிசு பிரபாகரன்( வெற்றி ) - அவருடைய தந்தையை பற்றி பத்திரிக்கையாளர் சுவாதி ( ஷில்பா மஞ்சுநாத்) 'மனிதம்' என்ற அச்சு ஊடகத்திற்கு பத்து வாரத்திற்கு தொடர் ஒன்றை எழுதுகிறார்.
இதற்காக பிரபாகரனும் , சுவாதியும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக ராமையா ( தம்பி ராமையா) பணியாற்றி வருகிறார்.
இந்த தருணத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் பாடசாலையில் பயிலும் மாணவர்களும், மாணவிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதனை கண்டறிவதற்காக காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. இதற்கு ராமையா தலைமை ஏற்கிறார். அவருக்கு உதவியாக பிரபாகரன் இணைகிறார்.
துப்பு துலக்குவதில் நிபுணரான பிரபாகரன் அந்த கொலை தொடர்பான தடயங்களை சேகரித்து காவல்துறைக்கு கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவுகிறார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மகேஷ் தாஸ் என்ற குற்றவாளியை நெருங்குகிறது. இதற்கிடையே காவல்துறை அதிகாரியான ராமையாவின் பதின்ம வயதுடைய மகள் எதிர்பாராவிதமாக தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனால் மனதளவில் சோர்வடையும் ராமையா- அந்த தற்கொலைக்கு காரணத்தை பிரபாகரனிடம் பகிர்ந்து கொள்ள, அந்த குற்றவாளிகளை பிரபாகரன் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு ராமையா அவர்களை தண்டித்தாரா ?இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி திரைக்கதையும் , கதாபாத்திரங்களும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக கிரைம் நாவலாசிரியரின் மகன் இயல்பிலேயே துப்புதுலக்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், துல்லியமாக அவதானிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் வடிவமைத்திருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வழக்கமான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கொமர்சல் அம்சங்கள் இடம்பிடித்திருப்பதால் சொதப்புகிறது. திரைக்கதை தடுமாறுகிறது.
வில்லனாக அறிமுகமாகி இருக்கும் மகேஸ்வரன் தேவதாஸ் தோற்றத்தில் உறுதி இருக்கும் அளவிற்கு நடிப்பில் இல்லை என்பதுதான் உண்மை. அவருடைய உடல் மொழிக்கும் அவருடைய உரையாடும் உரையாடலுக்கும் பாரிய இடைவெளி உள்ளது. ஒருவித அந்நியத்தனம் எட்டிப் பார்க்கிறது.
மின்னல் ராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி வழக்கம் போல் தன் உடல் மொழியால் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
சுவாதி எனும் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
பிரபாகரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் வெற்றி புலனாய்வு செய்யும் தருணங்களில் வலது காதை நீவி விடும் உடல் மொழி வித்தியாசமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை அவர் கொண்டிருந்தாலும் தோற்றத்தில் வித்தியாசத்தை காட்டி இருக்கலாம்.
படத்திற்கு அரவிந்தின் ஒளிப்பதிவும், ஏ ஜே ஆரின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளிக்கிறது.
சென்னை பைல்ஸ் முதல் பக்கம் - முழு நீள வெள்ளை தாளில் மையத்தில் இடம்பெறாத கரும்புள்ளி.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM