மீஷா 'படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக நடிகர் கதிர்

01 Aug, 2025 | 04:36 PM
image

'மதயானை கூட்டம் 'படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும் , 'பரியேறும் பெருமாள் ' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கதிர். அதனைத் தொடர்ந்து  விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' மற்றும்  'விக்ரம் வேதா ' ஆகிய படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்தார்.

'சுழல் ' எனும் இணைய தொடரிலும் நடித்து டிஜிட்டல் திரை மற்றும் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்திலும் பிரபலமான இவர் தொடர்ந்து வெற்றிகரமான படங்களில் நடிப்பதற்காக காத்திருந்தார்.  தற்போது மீஷா எனும் மலையாளத் திரைப்படத்தில் கதையின் நாயகர்களுள் ஒருவராக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் யெம்ஸி ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மீஷா' திரைப்படத்தில் கதிர், சைன் டாம் சாக்கோ, ஹக்கீம் ஷா, ஸ்ரீகாந்த் முரளி, ஜோ பேபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுரேஷ் ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சூரஜ் எஸ். குரூப் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யூனிகார்ன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஜீர் கஃபுர் தயாரித்திருக்கிறார்.

இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் மூலம் கதிர் மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். அடர்ந்த வனப் பகுதிக்கு பயணிக்கும் நண்பர்கள் குழுவை சுற்றி நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் என்பதால்.. இதற்கு தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பும் , ஆதரவும் கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டுகால...

2026-09-16 15:31:09
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-16 14:01:19
news-image

விமல் நடிக்கும் 'சண்டக்காரி' படத்தின் முன்னோட்டம்...

2026-09-16 13:47:29
news-image

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் 'ஃபீல்...

2026-09-16 13:50:23
news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05