இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுக்கு தெரிந்த தொழிலை நேர்மையாக செய்து கொண்டிருப்பார்கள். இதன் காரணமாகவே பல தருணங்களில் அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தல்களையும் , நெருக்கடிகளையும் , அழுத்தங்களையும் சந்திக்க நேரிடும்.
அது போன்ற தருணங்களில் 'வேறு வேலைக்கு சென்று விடலாமா?' என்ற எண்ணம் மேலோங்கும். வேறு சிலர் சற்று துணிச்சலாக புதிதாக வேலை ஏதும் கற்றுக் கொள்ளாவிட்டாலும் நேர்மையில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக செய்து வந்த வேலையை விட்டு விடுவார்கள்.
இவர்களுக்கு துணிச்சல் இருந்தாலும் நாளாந்த கடமைகள் மற்றும் பொருளாதார தேவைகள் அதிகரிப்பதால் வேறு வேலையை தேடிக் கொள்வது எளிதல்ல என்பதை புரிந்து கொள்வார்கள்.
இந்தத் தருணத்தில் உங்களுடைய வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும், உருவாக்கித் தருவதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ளலாம் என வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இவர்கள் அருகில் இருக்கும் நின்ற நிலையில் அருள் புரியும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று, காலை - மாலை என இரண்டு வேளையும் தவறாமல் நின்ற பெருமாளை வணங்கிட வேண்டும். அந்தத் தருணத்தில் உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் விளக்கேற்றவும்.
துளசி மாலையை சாற்றவும். தொடர்ந்து நம்பிக்கையுடன் பதினான்கு நாட்கள் வழிபட்டால் பதினைந்தாவது நாளில் உங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இது அனுபவ ரீதியாக கண்ட உண்மை. எனவே நின்ற நிலையில் அருள் பாலிக்கும் பெருமாள் பாதம் பணிந்து உங்களது புதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM