(நெவில் அன்தனி)
லங்கா பிறீமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆறாவது அத்தியாயம் இந்த வருடம் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 23ஆம் திகதிவரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய மூன்று பிரதான அரங்குகளில் லங்கா பிறீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படும்.
'ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் 2026உடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட கால்பகுதியில் எல்பிஎல் போட்டியை நடத்தவுள்ளோம்' என LPL போட்டி பணிப்பாளர் சமன்தா தொடன்வெல கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் நாட்டின் அதிசிறந்த முதல் தர கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடும் ஒரு சுறுசுறுப்பான தளமாக இலங்கையின் முதன்மையான உள்நாட்டு ரி20 போட்டியாக LPL அமைவதுடன் முழு உலகினாலும் ஈர்க்கப்படுகிறது.
2020இல் அரங்கேற்றப்பட்ட அங்குரார்ப்பண அத்தியாயத்திலிருந்து லங்கா பிறீமியர் லீக் தொடர்ச்சியாக வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது இலங்கை கிரிக்கெட் நாட்காட்டியில் மிக முக்கிய போட்டியாக உருவெடுத்துள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM