வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 14 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

01 Aug, 2025 | 02:12 PM
image

வியட்நாமின் வடக்கு மாகாணமான டியென் பியெனில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

வியாழக்கிழமை (31) இரவு பல மணி நேரம் பெய்த கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு வேகமாக அதிகரித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, அத்தோடு,   மாகாணத்தின் மலைப்பாங்கான  பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியதாக டியென் போங் பத்திரிகை  செய்தி  வெளியிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் மாகாணத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஹாங் பு ஷி கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவில்லை.

மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07
news-image

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4...

2026-07-18 15:17:31
news-image

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி;...

2026-07-18 10:24:03
news-image

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ்...

2026-07-18 09:26:16
news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31