(நெவில்அன்தனி)
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஆறு நாடுகளுக்கு இடையிலான ஜாம்பவான்கள் உலக சம்பியன்ஷிப் (World Championship of Legends) அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணியை எதிர்த்தாட இந்திய சம்பியன்ஸ் அணி மறுத்ததால் பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் கடந்த 20ஆம் திகதி நடைபெறவிருந்த லீக் போட்டியிலும் விளையாட இந்தியா மறுத்திருந்தது.
ஆனால், லீக் போட்டி கைவிடப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இரண்டு அணிளுக்கும் தலா ஒரு புள்ளியை வழங்கியிருந்தனர்.
லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இந்தியா 3 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் இருந்தன.
இதனை அடுத்து இரண்டு அணிகளும் இரண்டாவது அரை இறுதியில் நேற்று மோதவிருந்தன.
ஆனால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மோசமடைந்துள்ளதால் ஜாம்பவான்கள் உலக சம்பியன்ஷிப் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணியுடன் விளையாட இந்திய சம்பியன்ஸ் அணி மறுத்துவிட்டது.
இதன் காரணமாக ஷொயெப் தலைமையிலான பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இதேவேளை, பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய சம்பியன்ஸ் அணியை மிகவும் பரபரப்பான முறையில் ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா சம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா சம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் மோர்னி வென் வைக் 76 ஓட்டங்களையும் ஜோன்-ஜோன் ஸ்மட்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பீட்டர் சிட்ல் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டி'ஆர்சி ஷோர்ட் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் டேன் கிறிஸ்டியன் 49 ஓட்டங்களையும் கிறிஸ் லின் 35 ஓட்டங்களையும் டி'ஆர்சி ஷோர்ட் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வெய்ன் பார்னல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்டஸ் வில்ஜோயன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் சம்பியன்ஸ் அணிக்கும் தென் ஆபிரிக்கா சம்பியன்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (02) நடைபெறவுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM