பொது மக்களுக்கு செயற்திறன் மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய கட்டட தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன் இந்த அமைச்சு கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, மத்திய வங்கி கட்டட தொகுதியில் அமைந்திருந்தது. தற்போது அமைச்சின் புதிய கட்டிடத்தொகுதி இல.51 /2 /1, கொழும்பு 01, எசட் ஆகட் கட்டடத்தொகுதியின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது.