எம்மில் பலரும் யாருக்கு அஞ்சுகிறார்களோ இல்லையோ சனி பகவானுக்கு அஞ்சுவதை காண முடிகிறது. நீதிமான் என்றும், தொழில் காரகன் என்றும், ஆயுள் காரகன் என்றும், ' சனி கொடுத்தால் எவர் தடுப்பர் 'என்ற பழமொழிக்கும் சொந்தக்காரரான சனி பகவானின் பரிபூரண அருளைப் பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட நியமங்களை உறுதியாக பின்பற்ற வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். அது என்ன ?என்பதை தொடர்ந்து காண்போம்.
உங்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் சாதகமான பலனை தரும் அம்சத்தில் இல்லாத போது அவருடைய கடைக்கண் பார்வை பெறுவதற்கும், அவர் அளிக்கும் கெடு பலன்களை குறைத்துக் கொள்வதற்கும் அவரை சரணடைவது தான் உத்தமமான வழி. அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு அமைந்துள்ள நவக்கிரக சன்னதியில் சனி பகவானுக்கென பிரத்யேகமாக விளக்கேற்ற வேண்டும்.
அதே தருணத்தில் அங்கு விளக்குகள் இல்லை என்றாலோ அல்லது எரிந்து நிறைவடைந்த விளக்குகள் இருந்தாலும் அதனை பாவிக்க கூடாது. புதிதாக அகல் விளக்கினை வாங்கி, அதில் நல்லெண்ணையையும் கருப்பு துணியில் முடிச்சிடப்பட்ட கருப்பு எள்ளையும் இணைத்து விளக்கேற்ற வேண்டும். அதே தருணத்தில் நீங்கள் ஆலயத்திற்காக எடுத்துச் செல்லும் நல்லெண்ணையை மீதம் வைக்கக் கூடாது. மீதம் இருந்தால் அதனை வேறு விளக்குகளின் ஊற்றி விடவும்.
அத்துடன் சனி பகவானுக்கு பிடித்த உணவுகளை நிவேதனமாக படைக்க வேண்டும். தொடர்ந்து ஏழு முறை வலம் வந்து சனி பகவானை வணங்கிட வேண்டும். ஏனைய நாட்களை விட சனிக்கிழமைகளில் சனி ஓரையில் நீங்கள் நவ கிரகத்தில் இருக்கும் சனி பகவானை விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவான் அகம் மகிழ்ந்து உங்களுக்கான கெடு பலனை குறைப்பார். நல்ல பலனை அதாவது சுப பலனை வழங்குவார்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM