வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் 'ஜூடோபியா 2 'படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

31 Jul, 2025 | 05:41 PM
image

உலகளவில் அனிமேஷன் படைப்புகளுக்காக பெயர் பெற்ற வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஜூடோபியோ 2 'எனும் அனிமேஷன் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த அனிமேஷன் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஓஸ்கர் விருதினை வென்ற 'ஜூடோபியா' படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் இதில் இடம் பிடித்திருந்தாலும் புதிதாக கேரி டி' ஸ்நேக் , நிப்பிள்ஸ், டாக்டர் ஃபஸ்பி ஆகிய கதாபாத்திரங்கள் இதன் இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகிறது.

ஓஸ்கர் விருதினை வென்ற இயக்குநர்களான ஜாரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் ஆகியோர் இதன் உருவாக்க குழுவில் இடம் பிடித்திருக்கிறார்கள்.' ஜூடோபியா 2 ' எனும் இந்த அனிமேஷன் திரைப்படம் , வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் 64 வது அனிமேஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right